பழவேற்காடு சாலையில் உள்ள டீக்கடை கரும்பலகையில், 'பன்றியின் விலையைவிட,
மக்களது ஓட்டின் விலை குறைவு' என, உள்ளாட்சி தேர்தல் குறித்து, வித்தியாச
விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டிருந்தது.
பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.சேகர், 51, பழவேற்காடு சாலையில் டீக்கடை வைத்துள்ளார்.இவர், 25ஆண்டுகளாக, டீக்கடையில் கரும்பலகை வைத்து, பல்வேறு தகவல்களை எழுதி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தினமும், ஓட்டுப்பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசங்களை எழுதி வருகிறார்.அதில், 'கோஷம் போட கோழி பிரியாணியை மட்டும் எதிர்பார்க்காதீர்கள்; வேஷம் போடாத வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வருகிறார்.
இதில் நேற்று, இன்றைய சந்தை மதிப்பு என்ற தலைப்பில், அவர் எழுதிய வாசகம், கடைக்கு வருவோரையும், அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் சிந்திக்க வைத்தது.

No comments:
Post a Comment