மறைமலை நகரில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட, கல்லுாரி மாணவர்கள் உட்பட
நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.மறைமலை நகர் சுற்று வட்டாரத்தில், சில
நாட்களாக, வீடுகளில் துாங்கும் வாலிபர்களை தாக்கி, மொபைல் போன்,
மடிக்கணினி மற்றும் இருசக்கர வாகனங்களை, மர்ம நபர்கள் திருடிச்
சென்றனர்.
பாதிக்கப்பட்டோர் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க, தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், பொத்தேரி பகுதியில், ரோந்து பணியில் இருந்த போலீசாரை பார்த்து, இரண்டு, 'பல்சர்' இருசக்கர வாகனங்கள் வேகமாக சென்றன. இவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில், சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த அஜ்மல், 19, மேற்கு தாம்பரம் அனிமா பள்ளி தெரு கமல் பிரசாந்த், 21, என்பதும், தனியார் கல்லுாரியில் படிப்பதும் தெரிய வந்தது.இவர்களுடன் ரங்கநாதபுரம் கிஷோர், 20, வைத்தியேஷ்குமார், 21, ஆகியோரும், வீடுகளில் வசிப்போரை மிரட்டி, மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
இவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.'பிடிபட்ட மாணவர்களிடம், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு பின், வழிப்பறியில் கொள்ளை அடிக்கப்பட்ட விபரங்கள் வரும்' என, போலீசார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment