மதுராந்தகம் அருகே, பாழடைந்த வீட்டு வாசலில், கஞ்சா செடிகள்
வளர்ந்திருப்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர், நுார்துசாமி, 65; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.இவர், கடந்த ஆண்டுகளில், மதுராந்தகம் அடுத்த காந்தி நகரில், குடிசை வீட்டில் வசித்தார். மதுராந்தகத்தில் சொந்தமாக மனை வாங்கி, வீடு கட்டி அங்கு வாழ்கிறார்.
இந்நிலையில், நுார்துசாமி வசித்த குடிசை வீடு, பாழடைந்து கிடந்தது. இதன் வாசலில், கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது குறித்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.நேரில் வந்து ஆய்வு செய்த போலீசார், வளர்ந்திருப்பது கஞ்சா செடி என்பதை உறுதி செய்தனர். ஆள் இல்லாத வீட்டில், கஞ்சா வளர்த்திருப்பது குறித்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்.

No comments:
Post a Comment