திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு,
எஸ்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் மகள் தா.நிவேதா, 21, என்பவர்,
போட்டியிட்டுள்ளார்.
இவர், சென்னை காய்தே மில்லத் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று, எஸ்.அக்ரஹாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், ஓட்டு போட்டார்.ஊராட்சியில் போதிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதற்காக தான் கல்லுாரியில் படிக்கும் போதே, உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு உள்ளேன்.
ஒராண்டிற்குள், மாவட்டத்தில் முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவேன் என, அவர் தெரிவித்தார். நிவேதாவின் தந்தை, அ.தி.மு.க., கட்சியில், கடந்த, 35 ஆண்டுகளாக உள்ளார். தற்போது ஒன்றிய கழக பொருளாளராக உள்ளார்.

No comments:
Post a Comment