விபசார வழக்கில் பெண் ணுக்கு 4 ஆண்டும், விடுதி மேலாளருக்கு ஓராண்டு சிறை
தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, செட்டி தெருவில் உள்ள தனியார் விடுதியில்
கடந்த 2013ம் ஆண்டு விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பெரியக்கடை
போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து விடுதி மேலாளர் கோட்டக்குப்பம், ஷேக் பஷீர்,30; என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கொல்கத்தா மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு பெண்களும் கோர்ட் உத்தரவின்படி அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மற்றவர்கள் மீது, புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன், விபசாரம் நடத்திய காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 32 வயது பெண்ணிற்கு நான்காண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதமும், விடுதி மேலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மற்ற ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டனர்.அரசு சார்பில் வழக்கறிஞர் பிரவீன்குமார் ஆஜரானார்.

No comments:
Post a Comment