தீபாவளி சீட்டு நடத்தி, 1 கோடி ரூபாய் மோசடி செய்த நகை கடைக்காரர் மீது,
போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம் அடுத்த,
மேலவலளம்பேட்டையில், வாடகை வீட்டில் வசித்தவர், ராம்தேவ், 50; பூதுாரில்
நகை கடை வைத்திருந்தார்.
இவர், பூதுாரை சுற்றியுள்ள ஈசூர், வள்ளிபுரம், தச்சூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 500 பேரிடம், மாதம், 1,000 ரூபாய்க்கு, தீபாவளி சீட்டு பிடித்தார்.கடந்த தீபாவளியின் போது, பணம் கட்டியவர்களுக்கு வழங்க வேண்டிய நகை மற்றும் பொருட்கள் வழங்காமல், காலம் கடத்தி வந்தார்.
கட்டிய பணத்திற்கான நகை மற்றும் பொருட்களை வழங்கும்படி நெருக்கடி கொடுத்த நிலையில், சில நாட்களாக, ராம்தேவ் வசித்த வீடும், கடையும் பூட்டியே கிடந்தன; அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சீட்டு கட்டிய கிராமத்தினர், 50க்கும் மேற்பட்டோர், 'ராம்தேவ், 1 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவாகியுள்ளார். அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தரவேண்டும்' என, படாளம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment