விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் நேற்று துவங்கியது.அதன்படி, எல்.எல்.பி., 5 ஆண்டு சட்ட படிப்புக்கு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 60 சதவீதமும், மற்ற பிரிவினர் 70 சதவீதமும் மதிப்பெண் பெற்று இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் பெற இந்தியன் வங்கி கிளைகளில், கட்டணமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 500 ரூபாய் செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள், சேர்மன், லா அட்மிஷன் 2019-20, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் லா யுனிவசர்சிட்டி, பூம்பொழில், நெ.5, டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சென்னை-600 028 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விழுப்புரத்தில் திரு.வி.க., வீதியில் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வரும் அரசு சட்டக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நேற்று துவங்கியது. கல்லுாரியின் முதல்வர் முருகேசன், விண்ணப்ப விநியோகத்தை துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment