காஞ்சிபுரம் மாவட்டத்தில், 8.56 கோடி ரூபாய், 9.40 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபைதொகுதியிலும், 33 பறக்கும் படையினர், 33 நிலையான கண்காணிப்பு குழுவினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணப்பட்டுவாடா தொடர்பான புகார் வந்தால், நிலையான கண்காணிப்பு குழுவினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பர்.அந்த வகையில், 14ம் தேதி முதல், பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும், நேற்றைய நிலவரப்படி, 53 இடங்களில், 8.56 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது தவிர, 9.40 கோடி ரூபாய் மதிப்பில், தங்கம், வெடி பொருள், குட்கா உள்ளிட்ட பொருட்களை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment