வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 07, 2019

கல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்!

கல்யாணம் ஆன பெண் எஸ்ஐ-யின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி தாலி கட்ட முயன்ற போலீஸ் இப்போது புழலில் கம்பி எண்ணி கொண்டுள்ளார். 


சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வருபவர் மணிமேகலை. 24 வயதாகிறது. நுங்கம்பாக்கம் போலீஸ் குடியிருப்பிலேயே வசித்து வருகிறார். 

இதற்கு முன்பு இவர் காட்பாடியில் பயிற்சி எஸ்.ஐ,.யாக பணியாற்றி வந்திருக்கிறார். அந்த சமயத்தில், அங்கு ஊர் காவல் படை காவலராக கூடவே வேலை பார்த்தவர் பாலசந்திரன். இவருக்கு மணிமேகலையை பிடித்து போகவே அடிக்கடி சந்தித்துபேசி வந்திருக்கிறார். கொஞ்ச நாளில் பாலசந்திரனுக்கு மணிமேலை மீது ஒருதலை காதல் பிறந்தது.


கண்டித்த மணிமேகலை  

தன் காதலை மணிமேகலையிடம் சொல்லாமலே வந்துள்ளார். ஆனால் சிறிது நாளில் மணிமேகலைக்கு வேறு ஒரு இடத்தில் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனாலும் பாலச்சந்திரன் மணிமேகலையை அடிக்கடி நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை எத்தனையோ முறை மணிமேகலை கண்டித்து சொல்லிவிட்டார். ஆனால் பாலச்சந்திரனுக்கு மணிமேகலையை மறக்க முடியவில்லை.


காதல் டார்ச்சர்  

அதனால் நேற்று டியூட்டியில் மணிமேகலை இருந்தபோதும் போன் செய்து "காதல் டார்ச்சர்" தந்தார் பாலச்சந்திரன். இதனால் நேரில் வரவழைத்து வார்னிங் கொடுக்கலாம் என்று மணிமேகலை எழும்பூருக்கு பாலச்சந்திரனை வரவழைத்தார். பாலச்சந்திரனும், மணிமேகலை கூப்பிட்டதும் என்னவோ ஏதோ என்று கற்பனை பண்ணிக்கொண்டு ஓடிவந்தார்.


கழுத்தில் கத்தி  

அப்போது மணிமேகலை பாலச்சந்திரனிடம், தனக்கு காதலில் விருப்பம் இல்லை என்றும், ஏற்கனவே கல்யாணம் ஆனதை பற்றியும் சொல்லி எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தார். பிறகு திடீரென பாலசந்திரன் ஒரு பக்கம் மணிமேகலையின் கழுத்தில் கத்தியை வைத்துகொண்டு, மற்றொரு கையில் தாலி எடுத்து கட்ட போனார்.


புழலில் அடைப்பு

இதை பார்த்ததும் பதறிபோன மணிமேகலை கூச்சல் போட்டதும், போலீசார் விரைந்து சென்று பாலசந்திரனை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து மணிமேகலை எழும்பூர் ஸ்டேஷனில் புகாரும் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன், புழல் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

No comments:

Post a Comment