பெரு நாட்டைச் சேர்ந்த 31 வயது ஜுவான் கார்லோஸ் வாரில்லாஸின், தன்னுடைய
கையெழுத்தை சமூகவலைத் தளங்களில் வெளியிட்ட ஐந்தாவது நிமிடத்தில் பிரபலமாகி
விட்டார்.
தன்னுடைய அடையாள அட்டை, முக்கிய ஆவணங்களில் எல்லாம் கையெழுத்துக்கு பதில் பொம்மையைத்தான் வரைந்திருக்கிறார்.
கையெழுத்துக்குப் பதிலாக ஒரு பொம்மையை வரைந்து, அதைத்தான்
கையெழுத்தாகப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
(தொடர்ச்சி கீழே...)
தன்னுடைய அடையாள அட்டை, முக்கிய ஆவணங்களில் எல்லாம் கையெழுத்துக்கு பதில் பொம்மையைத்தான் வரைந்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜுவானையும்
அவரது நண்பர்களையும் காவல்துறை கைது செய்தது.
கையெழுத்து வாங்கிக்கொண்டு
விடுவித்தது. பிறகுதான் அவர்கள் இட்ட கையெழுத்துகளில் ஒன்று படமாக
இருந்ததைக் கண்டனர்.
ஜுவானை அழைத்து காரணம்
கேட்டனர். கிட்டி என்ற பொம்மையை தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், 16
வயதிலிருந்து அடையாள அட்டையில் பயன்படுத்த ஆரம்பித்து, அதையே கையெழுத்தாகத்
தொடர்ந்து வருவதாகச் சொன்னார். இனிமேல் இப்படிப் படம் போடக் கூடாது என்று
எச்சரித்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment