கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வித்தியாசமாக அச்சடித்துள்ள
திருமணப் பத்திரிக்கை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபகாலமாக திருமண அழைப்பிதழ்களை விதவிதமாக அச்சடிப்பது பிரபலமாகி
வருகிறது. மஞ்சள், ரோஸ் என கலர் கலராக அச்சடித்த காலம் போய், தற்போது
மணமக்கள் தங்கள் துறை சார்ந்ததாக வித்தியாசமாக திருமண அழைப்பிதழ்களை
அச்சடித்து அசத்தி வருகின்றனர்.
(தொடர்ச்சி கீழே...)
அந்தவகையில் கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் விஷ்ணு மணி என்பவர் நீதிமன்ற சம்மன் மாடலில் திருமண அழைப்பிதழை அச்சடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
அந்தவகையில் கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் விஷ்ணு மணி என்பவர் நீதிமன்ற சம்மன் மாடலில் திருமண அழைப்பிதழை அச்சடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் என்ன பரபரப்பு என்கிறீர்களா, இந்த அழைப்பிதழை
மெயிலில் பார்த்த பலர், தங்களுக்கு ஏன் திடீரென நீதிமன்ற சம்மன் வந்துள்ளது
என அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அதனை படித்துப் பார்த்த பிறகுதான் அது
சம்மன் அல்ல, திருமண அழைப்பிதழ் எனத் தெரிய வந்து நிம்மதிப் பெருமூச்சு
விட்டுள்ளனர்.
மாப்பிள்ளை விஷ்ணு மணி மட்டுமல்ல, மணமகள் அருந்ததியும் வழக்கறிஞர் தான்.
இவர்களது திருமணம் கோட்டயத்தில் இம்மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நீதிமன்ற சம்மன் நோட்டீஸ் வடிவிலான அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி
வருகிறது.
No comments:
Post a Comment