வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பேச முடியாத சிறுமியை பேச வைத்த சிம்பு:
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 24, 2018

பேச முடியாத சிறுமியை பேச வைத்த சிம்பு:



வாய் பேச முடியாத ஒரு சிறுமி இன்று பேசுவதற்கு காரணமாக இருந்துள்ளார் சிம்பு.


ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்ப்பவர்களால் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை. அதற்கு காரணம் சிம்பு செய்த ஒரு காரியம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
சிறுமி
சிம்பு தனது ரசிகன் வீட்டு சிறுமியுடன் பாச மழை பொழிந்ததை தான் அந்த வீடியோவில் காட்டியுள்ளனர். வாய் பேச முடியாத சிறுமியை சிம்புவிடம் அழைத்து வந்துள்ளார் ரசிகர். சிம்புவோ, கவலைப்படாதே இனி அவள் என் பொறுப்பு என்று கூறி சிகிச்சை அளித்து பேச வைக்க உதவி செய்துள்ளார்.

ஐஸ்கிரீம் 
ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு வந்த அந்த சிறுமி சிம்புவை பார்த்து சிம்பு மாமா, சிம்பு மாமா என்று அழைத்தார். பேச முடியாமல் இருந்து பேசும் அந்த குட்டிப் பிள்ளையின் குரலை கேட்டு சிம்புவுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்கள் அனைவருக்கும் கண் கலங்கியது. சிம்பு எமோஷனலாகிவிட்டார். அந்த சிறுமி சிம்புவுக்கு ஐஸ்கிரீம் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

தலைவன் 
சிறுமியின் மாமா மேடைக்கு வந்து சிம்பு பற்றி பேசினார். நான் சிம்புவின் தீவிர ரசிகன். இன்று இந்த குழந்தை பேசுகிறது என்றால் அதற்கு எங்கள் அண்ணன் சிம்பு தான் காரணம். அவர் உண்மையான தமிழர் என்று கூறி உணர்ச்சிவசப்பட்டார்.

சினிமா  
தமிழ் உணர்ச்சியில் தான் அவர் அனைத்தையும் செய்கிறார். ஆனால் இருக்கிறவர்கள் தான் அவரை போட்டி அடிக்கிறார்கள். ஆனால் அவருக்காக நாங்கள் இருக்கிறோம். திரையுலகில் அவரை காலி செய்யப் பார்த்தார்கள் என்றார் அந்த ரசிகர். அதை கேட்ட சிம்பு, என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியம் அல்ல, நம்ம புள்ள இன்று பேசுவது தான் முக்கியம் என்றார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment