வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 10, 2018

பொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்!



பேனர் வெச்சதால ஒரு கல்யாணமே நின்னு போயிடுச்சு... அது என்ன பேனர் தெரியுமா? ஆரணி அருகே ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தீவிர திமுக பிரமுகர்.


 

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தவர். இவரது மகள் சந்தியா. இவருக்கும் சண்முகம் என்பவருக்கும் பெரியவர்கள் கல்யாண நிச்சயம் செய்தார்கள். எல்லாமே நல்ல பொருத்தமாகத்தான் இருந்தது. ஒன்னே ஒன்றை தவிர. மாப்பிள்ளை வீட்டார் அதிமுககாரர்களாம்!! இருந்தாலும் இதை ஒரு விஷயமா எடுத்துக் கொள்ளாமல் கல்யாண வேலை தடபுடலாக நடந்தது. நேத்து காலைலதான் முகூர்த்தம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கட்சி கொடி 

நேற்று முன்தினம் இரவு மணமக்கள் அழைப்பு நடந்து, அதில் ஊரே வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு போனது. நேற்று காலைல கல்யாணம் என்பதால் மணமக்களை வாழ்த்தி பல பேனர்கள் மண்டபம் அருகில் வைக்கப்பட்டன. அதில் திமுக பேனரும் வைக்கப்பட்டது. வெறும் பேனர் மட்டும் இல்லாமல், கட்சி கொடியும் கட்டப்பட்டது.


திமுக பேனர்

இந்த கட்சி பேனரை மாப்பிள்ளை பார்த்துவிட்டார். அது எப்படி திமுக கொடி கட்டி பேனர் வைக்கலாம் என்று பெண் வீட்டாரிடம் சண்டைக்கு போய்விட்டார். பெண் வீட்டார் ஏதேதோ காரணங்களை சொன்னாலும், "கல்யாண செலவு எங்களுடையது. அப்படி இருக்கும்போது நீங்க எப்படி திமுக பேனரை எங்களை கேட்காமல் வைக்கலாம்" என்று வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் தகராறாக மாறி, தகராறு மோதலாக மாறி, மோதல், கைகலப்பாக முடிந்தது

மாப்பிள்ளை வேண்டாம் 

இது எல்லாத்தையும் ஷாக்குடன் பார்த்து கொண்டிருந்த மணப்பெண் சந்தியா, "கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளை இவ்ளோ பிரச்சனை பண்றாரே, தாலியை கட்டிட்டா இன்னும் எவ்வளவு பிரச்சனை பண்ணுவார்?? என பயந்தபடியே கேட்டார். அதோடு இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என்றும் எல்லோர் முன்னாடியும் போட்டு உடைத்தார்.


வெளியேறினார்  

சந்தியா இப்படி சொல்வார் என மாப்பிள்ளை எதிர்பார்க்கவே இல்லை. அதனால் அவமானம் தாங்காமல் மாப்பிள்ளை கோபித்து கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறி போனார். அவர் பின்னாடியே அவர் வீட்டு ஆட்களும் சென்றார்கள். இதனால் நடக்க இருந்த கல்யாணம் நின்றுவிட்டது.

தங்கை மகன் ஏழுமலை 

கல்யாண பெண் இப்படி சொல்லவும், அவரது பெற்றோரும் இதை எதிர்பார்க்கவில்லைதான். இதனால் சந்தியாவின் அப்பா எப்படியாவது மகளின் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி கல்யாணத்துக்கு வந்திருந்த தனது தங்கை மகன் ஏழுமலையிடம் சென்று, மகளை கல்யாணம் செய்துக்க சம்மதமா என்று கேட்க, அவரும் சம்மதம் சொன்னார்.


திடீர் மாப்பிள்ளை 

இதையடுத்து, சந்தியாவுக்கும், திடீர் மாப்பிள்ளை ஏழுமலைக்கும் அருகில் இருந்த கோவிலில் கல்யாணம் நடந்தது. இந்த பழைய மாப்பிள்ளை சண்முகத்துக்கு தெரியவந்ததும், நேராக ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். எது எதுக்கோ கல்யாணம் கடைசி நேரத்துல நின்னு போயிருக்கு. ஆனா இப்படி பேனர் வெச்சதால நின்னுபோனது பெரும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment