வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி
வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் மற்றும் வடக்கு கேரள கரை வரை நிலவிவந்த காற்றழுத்த
தாழ்வுநிலை, தற்போது லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலவி
வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில்
பரவலாகவும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான
மழை பெய்ய வாய்ப்புள்ளது. (தொடர்ச்சி கீழே...)
பெய்யக் கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன்
காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம்
கூறியது.
தாழ்வுப் பகுதி
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தென்கிழக்கு வங்கக் கடல்
மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில்
காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று அதே
பகுதியில் வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற
வாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் மழை
லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு
சுழற்சி நிலவுவதாலும், கிழக்கு திசைக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மழைக்கான வாய்ப்பு
அதே போல் தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த
தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், அதன் பின்னரே
தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு குறித்து கூற முடியும் என்று
விளக்கமளித்துள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
- ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு க...
- மோட்டர் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
- இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை ச...
- மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
- ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு ...
- "நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!செய்திய...
- டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி செய்தியை முழுமையாக பட
No comments:
Post a Comment