வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தடை -இந்திய சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 14, 2018

நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தடை -இந்திய சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி



இந்திய அரசின் புதிய ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை நேபாள மக்கள் பயன்படுத்த அந்நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

நேபாளத்தில் இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுகளான ரூ.2000 ரூ.500 ரூ.200  ஆகிய நோட்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆர்.பி.ஐ யின் புதிய ரூபாய் நோட்டுகள் அந்நாட்டில் பயன்படுத்த சட்டமாக்கபடவில்லை.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மேலும் 2020-ல் விசிட் நேபாள் என்ற திருவிழா நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தி காத்மாண்டு போஸ்ட் பத்திரிக்கைக்கு நேபாள தகவல் மற்றும் தொடர்புத்துறை மந்திரி கோகுல் பிரசாத் பஸ்கோடா கூறியதாவது:-

நேபாளத்தில் இந்திய அரசின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த உயர்ந்த மதிப்புள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கையில் வைத்திருக்கவும் வேண்டாம். மாறாக, இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்துக்கு பயன்படுத்தலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

நேபாள அரசின் இந்த முடிவால், இந்தியாவில் பணியாற்றும் நேபாள மக்களும், நேபாளத்துக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களும் கடுமையாக  பாதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு  நடவடிக்கையைக் கொண்டு வந்தபோது, நேபாளத்தில் கோடிக்கணக்கில் ரூ.500 , ரூ.1000 நோட்டுகள் தேங்கிவிட்டன. அந்த நோட்டுகளை இதுவரை மத்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதால், நேபாள அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment