டெல்லி பாதுகாப்பு இல்லங்களில் சிறுமிகளுக்கு ஊழியர்கள் பாலியல்
தொந்தரவு தருவதாக புகார் எழுந்துள்ளன.
மிளகாய் பொடிகளை வாயில் திணித்தும்,
ஆசனவாயில் அடைத்தும் துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
(தொடர்ச்சி கீழே...)
பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளும், கிராமங்களில் இருந்து படிக்க வந்த சிறுமிகளும் டெல்லியின் டிவர்கா பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் தங்கி படித்து வருகின்றனர். அங்கு, 6 வயது முதல் 15 வயதிலான சிறுமிகள் என 22 பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரே ஒரு சமையல்காரர் உள்ளார்.
ஊழியர்கள் தொந்தரவு
சிறுமிகளுக்கு ஊழியர்கள் பாலியல் தொந்தரவு செய்து வருவதாகவும், கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பதாகவும், உடைகளை துவைக்க வைப்பதோடு, பாத்திரங்களை கழுவ செய்வதாகவும் அம்மாநில மகளிர் கமிஷன் புகார் அளித்துள்ளது.
கடும் தண்டனை
இந்தநிலையில், வியாழக் கிழமையன்று டெல்லி மகளிர் கமிஷன் உறுப்பினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சொல்லும் பணியை செய்யாத டீன் ஏஜ் பெண்களுக்கு வாயில் மிளகாய் பொடியை வைத்து தண்டனை வழங்கப்படுவதாகவும், ஆசனவாயில் மிளகாய் பொடியை வைத்து அடைப்பதாகவும் குமுறலுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், கோடை மற்றும் குளிர்கால விடுமுறைக்கு கூட வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர்.
போலீசாருக்கு கோரிக்கை
டிவர்கா பெண்கள் பாதுகாப்பு இல்லத்தை காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லி மகளிர் கமிஷனின் தலைவர் சுவாமி மாலிவால் கேட்டுக்கொண்டார். சிறுமிகளின் வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோதனை நடத்த வேண்டும்
முன்னதாக, டெல்லி தலைமைச் செயலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மகளிர் கமிஷன் உறுப்பினர்கள், டிவர்கா பாதுகாப்பு இல்லத்தை போன்று, டெல்லியின் மற்ற பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர், சிறுமிகளிடம் என்ன நடக்கிறது என்பதை கேட்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பாதுகாப்பு இல்லங்களை மேம்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்றும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment