வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ. ராஜ்பல்லா யாதவ் குற்றவாளியாக அறிவிப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 15, 2018

சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ. ராஜ்பல்லா யாதவ் குற்றவாளியாக அறிவிப்பு



15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பீகார் எம்.எல்.ஏ. ராஜ்பல்லா யாதவ் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.






பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லா யாதவ்.  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 2016-ம் தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியே போலீசில் புகார் அளித்தார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி, மயக்கி, பாலியல் உறவுக்காக எம்.எல்.ஏ.விடம் ஒப்படைத்த சுலேகா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடன் சுலேகாவின் தாய் ராதா தேவி, சோட்டி குமாரி, துளசி தேவி, மோத்தி ராம் ஆகியோரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், ராஜ்பல்லா யாதவை கட்சியில் இருந்து நீக்கியதாக அம்மாநில ராஷ்டரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்தார். தலைமறைவாக இருந்த ராஜ்பல்லா யாதவை பின்னர் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

சுமார் இரண்டாண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ராஜ்பல்லா யாதவ் உள்பட 5 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளார். இவர்களுக்கான தண்டனை விபரம் தொடர்பாக வரும் 21-ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

No comments:

Post a Comment