நாய் ஆனாலும் நானும் தாய் தானடா?!! என்று சொல்லாமல் சொல்லி அனைவரையும்
திரும்பி பார்க்க வைத்துள்ளது அந்த நாய்!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுள் புதுக்கோட்டையும் ஒன்று.
உயிரிழப்பையும் தாண்டி, வீடு, வாசல்கள் இழந்து வெட்டவெளியில் தங்கிய மக்களை
நாம் கண்கூடாக பார்த்தோம். மனிதர்களுக்கே இந்த கதி என்றால், ஆடு, மாடுகள்
சொல்லவே தேவையில்லை.
(தொடர்ச்சி கீழே...)
பல விலங்குகள் கொத்து கொத்தாக மடிந்தன. பல உயிரினங்கள் ஓடி ஒளிந்துஉயிரை காப்பாற்றி கொண்டன. அதில் ஒரு சிலது மட்டும் ஊருக்குள் இன்னும் நடமாடி வருகின்றன. அப்படித்தான் ஒருவர் தன் ஆடு, நாயை காப்பாற்றி தன்னுடனே வைத்திருந்தார்.
இறந்துவிட்டது
அன்னவாசல் அருகே உள்ளது குமரமலை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் நீண்ட காலமாகவே ஒரு ஆட்டையும், நாயையும் வளர்த்து வந்தார். புயலின்போதுகூட அந்த நாய், ஆட்டுக்கு எதுவும் ஆகாமல் பாதுகாத்தார். இதில் அந்த ஆடு ஒரு குட்டியை ஈன்றது. ஆனால் ஈன்றதும் 4 நாளில் இறந்து விட்டது.
சோர்வுற்ற ஆட்டுக்குட்டி
இதனால் மனம் நொந்த துரைசாமி, குட்டியை பொத்தி பொத்தி வைத்து வருகிறார். தாயை இழந்த ஆட்டுக்குட்டியோ பால் குடிக்க தடுமாறி வந்தது. துரைசாமியும் பாட்டிலில் பால் எடுத்து ஆட்டுக்குட்டிக்கு கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் ஆட்டுக்குட்டி குடிக்காமல் அங்கும் இங்குமாய் ஓடி திரிந்தது. தாயை காணாமல் தவித்தபடியே பசியுடன் சோர்வுற்று இருந்தது.
பால் குடிக்கிறது
இந்தநேரத்தில், துரைசாமி வீட்டு நாய், ஆட்டுக்குட்டியை தேடி அருகில் வர ஆரம்பித்தது. நெருங்கி நெருங்கி வந்து மெதுவாக ஆட்டுக்குட்டியுன் பழக ஆரம்பித்துவிட்டது. பிறகு நாயானது தன் குட்டி போல அரவணைக்க துவங்கியது. ஆட்டுக்குட்டியும் தான் தாய் இல்லை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தது. பின்னர் நாயையே தனது தாயாக பாவித்து, நாயிடம் பால் குடிக்க ஆரம்பித்துவிட்டது.
கிராம மக்கள் வியப்பு
இதை துரைசாமியே வியந்து சொல்கிறார். நாய் ஆட்டுக்குட்டியை கடித்துவிடும்என்று ஆரம்பத்தில் பயந்தே இவர்கள் போனார்களாம். இப்போது கிராம மக்கள் இரு ஜீவன்களையும் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள்.
துள்ளி ஓடுகிறது
எப்போவெல்லாம் பசி எடுக்கிறதோ, அப்போதெல்லாம் நாயிடம் உரிமையாக பால் குடித்துவிட்டு உற்சாகத்துடன் துள்ளி விளையாடி வருகிறது அந்த ஆட்டுக்குட்டி!!
No comments:
Post a Comment