தமிழிசையின் போஸ்டரில் அவரது வாயை ஊசி நூலால் தைத்து ஜெ.தீபா
அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள்
போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டம் 100 நாட்களை எட்டியவுடன்
பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர்.
(தொடர்ச்சி கீழே...)
அப்போது அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததால் போலீஸார் அவர்களை
தடுத்து நிறுத்தினர்.எனினும் அவர்கள் முன்னேறிக் கொண்டே சென்றதால் போலீஸார்
அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த ஆலையை
பூட்டி சீல் வைத்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க அனுமதி
கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது.
மக்கள் போராட்டம்
அப்போது அந்த தீர்ப்பாயம் அனுமதி கொடுத்தது. மேலும் இதை எதிர்த்து தமிழக
அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. இதற்கு தமிழகமே கடும்
கொந்தளிப்பில் உள்ளது. மீண்டும் மக்கள் போராட்டம் தலைதூக்கியது.
முட்டாள்கள்
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஜெ.தீபா பேரவையினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு
எதிராக போராடுபவர்கள் முட்டாள்கள் என்று தமிழிசை கூறியதாக தெரிகிறது.
ஊசி நூல்
கொண்டு
இதை கண்டித்தும் ஜெ.தீபா பேரவையினர் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக
மக்களை முட்டாள்கள் என கூறிய தமிழிசையின் வாயை தைக்க வேண்டும் என கூறிய
அவர்கள், அவரது உருவம் கொண்ட போஸ்டரில் அவரது வாயை ஊசி நூல் கொண்டு தைத்து
நூதன போராட்டம் நடத்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பட்டபகலில் மனைவியை அடித்து கொன்ற கணவன், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதோடு, நடந்த சம்பவத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்...
-
நோக்கியா. ..பேரைக் கேட்டவுடனே பலருக்கு நாஸ்டால்ஜியா ஞாபகங்கள் நினைவுக்கு வந்து போகும். ஒரு காலத்தில் சந்தையை ஆண்ட நோக்கியா வீண் பிட...
-
MEDICAL LEAVE FORMAT - ML FORMAT in Tamil Click here to Download Medical Leave Format
-
வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, பா.ஜ., மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. தி.மு.க., தரப்பில், இன்னும், ...
-
சென்னைக்கு வந்தாலே புதிய பதவிகள் தேடி வரும். அடுத்த பிரதமராக அமரப் போகிறார் ராகுல்காந்தி என்று துரைமுருகன் பேசினார். கருணாநிதி...
-
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைஅரியலுார் துணை மின் நிலையம்: அரியலுார், அத்தியூர், தொழுவந்தாங்கல், கடுவனுார், பெரியக்கொள்ளியூர், வடமா...
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன...
-
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பெற்ற குழந்தைகளை காரிலேயே விட்டுவிட்டு சென்றதால் இருவரும் இறந்...
-
குற்றச் சம்பவங்களை குறைக்கும் நடவடிக்கையாக சென்னையில் காவல்துறையினர் சார்பில் 1.80 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ...
No comments:
Post a Comment