வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் கேன்சரை உருவாக்குகிறதா? அதிகாரிகள் ஆய்வு!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 19, 2018

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் கேன்சரை உருவாக்குகிறதா? அதிகாரிகள் ஆய்வு!



ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பல கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை இவர்கள் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள். 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பவுடர், சோப், ஷாம்பு என்று மிக அத்தியாவசியமான பொருட்களை இவர்கள் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களின் நிறுவனத்திற்கு எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
என்ன குற்றச்சாட்டு 
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில ஆங்கில ஊடகங்கள் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுரைகளை வெளியிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சிலரின் பேட்டியும் அந்த கட்டுரைகளில் இருந்தது.


பல இடங்களில் சோதனை 
இந்த நிலையில் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்புகளை சோதனை செய்தது. 100 விதமான இடங்களில் பல்வேறு விதமான பொருட்களை சோதனை செய்து வருகிறது. தயாரிப்பு கூடம் , விற்பனை கூடம் என்று பல இடங்களில் இது தொடர்பாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஏன் சோதனை 
ஆனால் இந்த சோதனை இந்த குற்றச்சாட்டு காரணமாகத்தான் நடக்கிறது என்று கூறப்படவில்லை. எதன் காரணமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்படவில்லை. இப்போது இது தொடர்பாக எந்த விதமான கருத்தும் தெரிவிக்க முடியாது என்று மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.


ஜான்சன் அண்ட் ஜான்சன் 
அதேபோல் ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக வரும் செய்திகள் எல்லாம் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ஆதாரத்துடன் இதை நிரூபிப்போம் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது.


பெரிய சரிவு 
இந்த புகார்கள் மற்றும் சோதனைகள் காரணமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்த புகார்கள் காரணமாக மொத்தமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4 கோடி டாலர் வரை பங்கு சந்தையில் இழப்பு ஏற்பட்டது. இது அந்த நிறுவனத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment