வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: முன் ஜென்மத்து காதலர்கள் என்ற நம்பிக்கை.. 6 வயது அண்ணனிற்கு தங்கையை திருமணம் செய்து வைத்த பெற்றோர்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 31, 2018

முன் ஜென்மத்து காதலர்கள் என்ற நம்பிக்கை.. 6 வயது அண்ணனிற்கு தங்கையை திருமணம் செய்து வைத்த பெற்றோர்!

தாய்லாந்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தாய்லாந்தின் பேங்காக் நகரை சேர்ந்த அமோரன்சேன் சன்ந்த்ரோன் - பஞ்சாரப்ரோன் தம்பதிக்கு கடந்த 2012ம் ஆண்டு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

தாய்லாந்தில் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகம். புத்த மத நம்பிக்கையின் படி ஒரு பெண்ணிற்கு இரண்டை குழந்தையாக ஆண் மற்றும் பெண் என வெவ்வேறு பாலினங்களைச் சேர்ந்த குழந்தைகள் பிறந்தால், அவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. முந்தைய ஜென்மத்தில் சேர முடியாமல் போனதால், அடுத்த ஜென்மத்தில் அவர்கள் ஒரே தாயின் கர்ப்பத்தில் ஒன்றாக சேர்ந்து பிறப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஜென்மத்தில் அவர்களைச் சேர்த்து வைப்பது அவர்களது பழக்கமாக இருக்கிறது. இதன்மூலம் அவர்களது பூர்வ ஜென்மக் கடன் தீரும் என்பது அவர்களது நம்பிக்கை.

இதனால், அமோரன்சேன் மற்றும் பஞ்சாரப்ரோன் தம்பதி தங்களது குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, தற்போது ஆறு வயதாகும் அந்த இரட்டையர்களுக்கு கடந்த வாரம் அவர்களது நாட்டு வழக்கப்படி திருமணம் நடைபெற்றது. அதில், உறவினர்கள் நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்காக மணமகன் சார்பாக மணமகளுக்கு 2 லட்சம் பாத் வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்திய மதிப்பில் இது ரூ 4.30 லட்சம் ஆகும். 6 வயதிலேயே இவர்களுக்கு திருமணம் செய்தது வைத்தது குறித்து அவர்களின் தந்தை கூறுகையில், “சிறு வயதில் திருமணம் செய்தால் தான் அவர்கள் எதிர்கால வாழ்வில் சந்தோஷமாகவும், சிறப்பாகவும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் குழந்தைத் திருமணம் தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

No comments:

Post a Comment