அடிமை போல் நடத்துவதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச்
சேர்ந்த ஒரு தம்பதியினரால் வாங்கப்பட்ட 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க
வைத்ததால் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் ஜெர்மனியை விட்டு வெளியேறினார். பின்னர் துருக்கி மற்றும் சிரியா
வழியாக ஈராக் சென்ற அவர் அங்குள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
அவரும் அவரது கணவரும் கடந்த 2015-ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை அடிமையாக விலைக்கு வாங்கினர். அந்த குழந்தைக்கு ஒரு நாள் உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மெத்தையில் சிறுநீர் கழித்துவிட்டார்.
கொளுத்தும் வெயில்
இந்த காரணத்தால் ஆத்திரமடைந்த ஜெனிபரின் கணவர் அந்த சிறுமியை வெளியே இழுத்து சென்று கட்டி வைத்தார். இதனால் கொளுத்தும் வெயிலில் அந்த சிறுமிக்கு தாகத்துக்குகூட தண்ணீர் கொடுக்காமல் விட்டு விட்டனர்.
ஆதாரம்
இதில் அந்த சிறுமி பலியானார். அந்த சிறுமி இறந்தவுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மன் தூதரகத்தை அணுகிய ஜெனிபர் புதிய அடையாள சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தார். குழந்தை சாவில் ஜெனிபருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்காததால் அவர் சொந்த நாடு திரும்ப துருக்கி போலீஸார் அனுமதித்தனர்.
ஆஜர்
இந்நிலையில் ஜெனிபர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் சிரியாவுக்கு செல்ல ஆயத்தமானார். அப்போது அவரை ஜெர்மன் நாட்டு போலீஸார் கைது செய்தனர். அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.
சிறையில் அடைப்பு
இந்த தவறை அவரது கணவர் செய்திருந்தாலும் அதை தடுத்து
அக்குழந்தையை காப்பாற்ற ஜெனிபர் தவறிவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது போர் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கபபட்டார்.
No comments:
Post a Comment