வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காருக்குள் குழந்தைகளை பூட்டி விட்டு விடிய விடிய பார்ட்டி, "உறவு".. 2 குழந்தைகளும் பரிதாப பலி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 18, 2018

காருக்குள் குழந்தைகளை பூட்டி விட்டு விடிய விடிய பார்ட்டி, "உறவு".. 2 குழந்தைகளும் பரிதாப பலி



அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பெற்ற குழந்தைகளை காரிலேயே விட்டுவிட்டு சென்றதால் இருவரும் இறந்துவிட்டனர்.

 
இதையடுத்து அந்த பெண்ணுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் அமாந்தா ஹாக்கின்ஸ் (19). இவருக்கு பிரைன் ஹாக்கின்ஸ் (1), ஆடிசன் ஓவர்கார்ட் எடி (2) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர்.
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்நிலையில் கடந்த ஆண்டு மலை பாங்கான இடத்தில் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ள குழந்தைகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் இரு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர்.


மயக்கம்
இதையடுத்து பதறிய அமாந்தா, அவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது மருத்துவர்கள் கேட்டபோது ஏரியில் அருகே உள்ள செடியை முகர்ந்ததால் அவர்கள் இருவரும் மயக்கமடைந்ததாக கூறியுள்ளார்.

பொய் காரணம் 
இதையடுத்து அமாந்தாவின் விளக்கத்தால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் நேராக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து அமாந்தாவிடம் விசாரணை நடத்தினர். அப்போதும் அவர் அதே காரணத்தையே கூறினார்.


வாக்குமூலம் 
இதையடுத்து அமாந்தாவிடம் விசாரிக்க வேண்டிய விதத்தில் போலீஸார் விசாரித்தனர். அப்போது குழந்தைகள் தனது செயல்பாடுகளால்தான் இறந்தது என்பதை ஒப்புக் கொண்டனர். அவர் போலீஸிடம் வாக்குமூலம் அளித்தார்.

தடைப்பட்டுவிடும் 
அதில் அவர் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு பார்ட்டிக்கு சென்றுள்ளார். அப்போது இரு குழந்தைகளும் சும்மா அழுது கொண்டே இருந்ததால் எங்கே இவர் பார்ட்டியில் கலந்து கொள்வது தடைப்பட்டுவிடுமோ என பயந்துள்ளார்.


குழந்தைகள்
இதையடுத்து இருவரையும் தூக்கிக் கொண்டு காரில் போட்டு பூட்டியுள்ளார். சுமார் 15 முதல் 18 மணி நேரம் வரை அந்த காரிலேயே குழந்தைகள் இருந்தனர். அப்போது இருவரது அழுகுரல் கேட்டு பார்ட்டிக்கு வந்த சிலர் குழந்தைகளை அழைத்து வருமாறு கூறினர்.

தேடல் 
அதற்கு அமாந்தாவோ வேண்டாம், அவர்கள் தூங்குவதற்கு அப்படிதான் அழுவார்கள் என கூறிவிட்டார். இதையடுத்து பார்ட்டியில் குடித்துவிட்டு அங்கேயே அமாந்தா உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அடுத்தநாள் மதியம் எழுந்து குழந்தைகளை காணாது தேடியுள்ளார்.


கைது  
இதையடுத்து காரில் விட்ட ஞாபகம் வந்து விடவே போய் காரில் பார்த்து விட்டு அவர்கள் மயக்க நிலையில் இருப்பதாக கூறி மருத்துவமனையில் பொய்யான தகவலை அளித்துள்ளார். இதையடுத்து அமாந்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வீட்டு விலங்குகள்  
அப்போது நீதிபதிகள் , அமாந்தா தன் பிள்ளைகளை வளர்த்ததை காட்டிலும் மற்றவர்கள் தங்களது நாய், பூனை உள்ளிட்ட வீட்டு விலங்குகளை அருமையாக வளர்த்துள்ளனர். எனவே அமாந்தாவுக்கு தலா 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment