வரும் 2019ம் ஆண்டில் இந்தியாவில் 2 கிரணங்கள் தென்படும் என்று
கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் உலகில் 5 கிரகணங்கள் தென்படும் என்று
வானியல் கூர்நோக்கு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2 அரிய கிரணங்கள் தென்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து தகவல்கள்
(தொடர்ச்சி கீழே...)
(தொடர்ச்சி கீழே...)
கிரகணம்:
கிரகணம் (eclipse) என்பது வானியல் பொருள் ஒன்று வேறொரு பொருளின் நிழலினாலோ அல்லது வேறொரு பொருள் இப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் செல்லுவதாலோ தற்காலிகமாக மறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் சூரிய கிரகணத்தையோ, அல்லது நிலா பூமியின் நிழலினுள் செல்லும் போது ஏற்படும் சந்திர கிரகணம் ஆகியவற்றை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், பூமி-சந்திரன் தவிர்ந்த வேறு தொகுதிகளுக்கும் கிரகண நிகழ்வு பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கோள் ஒன்று தனது நிலாக்களில் ஒன்றின் நிழலினுள் செல்லுவது, நிலா ஒன்று தனது கோளின் நிழலினுள் செல்லுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இரும விண்மீன் தொகுதி ஒன்றிலும் இவ்வாறான கிரகணம் ஏற்படும்.
சூரிய கிரகணம்:
சூரியனின் மையப்பகுதி மட்டும் நிலவினால் மறைக்கப்பட்டு, விளிம்புப்பகுதி மறைக்கப்படாமல் இருக்கும் போது, ஒரு ஒளி-வளையம் போன்ற தோற்றத்துடன் சூரியன் காட்சியளிக்கும்; இதுவே சூரியனின் கங்கணகிரகணம் (annular eclipse) அல்லது வலயக்கிரகணம் அல்லது வளைய மறைப்பு என்று அழைக்கப்படுகிறது.
சந்திர கிரகணம்
நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். இது சூரியன், பூமி, நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும். இதனால் முழு நிலவில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். கிரகணத்தின் வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைச் சார்ந்து இருக்கும்.
5 கிரணங்கள்:
2018-ம் ஆண்டு 2 முழு சந்திர கிரகணம் உள்பட 5 கிரகணங்கள் ஏற்பட்டதாக மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள ஜிவாஜி வானியல் நிகழ்வுகளின் கூர்நோக்கு மையத்தின் மேற்பார்வையாளர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார். அதேபோல், வரக்கூடிய 2019-ஆம் ஆண்டிலும் 5 கிரகணங்கள் ஏற்பட இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவில் காண முடியும்:
ஜூலை 16, 17-ல் ஏற்படும் பகுதி சந்திர கிரகணமும், அடுத்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஏற்படும் சூரிய கிரகணமும் மட்டுமே இந்தியாவில் காண முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். பிற கிரகணங்கள், பகலிரவு மாறுபாடு காரணமாக இந்தியாவில் தென்படாமல் போகும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment