வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மசாஜுக்கு வந்த தொழிலதிபர்.. 2 பெண்களுடன் ஜாலி.. திடீரென புகுந்த நால்வர்.. பிறகு நடந்தது என்ன?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 01, 2018

மசாஜுக்கு வந்த தொழிலதிபர்.. 2 பெண்களுடன் ஜாலி.. திடீரென புகுந்த நால்வர்.. பிறகு நடந்தது என்ன?



வீட்டையே மசாஜ் சென்டராக மாற்றி பலரிடம் பணம் பறித்த 2 பெண்கள் கைது 
வீட்டையே மசாஜ் சென்டராக மாற்றி பலரிடம் பணம் பறித்த 2 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாதவரத்தை சேர்ந்தவர் நிர்மலா. 27 வயதான இவர் தனது கணவனை பிரிந்து வாழ்கிறார். 

அதனால் ஜீவனத்துக்காக அண்ணநகரில் ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இவர் ஒரு தொழிலதிபர். கொடுங்கையூரில் வசித்து வருகிறார். இவருடன் பழக்கம் கிடைத்ததும் நிர்மலா தன் வேலையை விட்டுவிட்டு, வீட்டிலேயே மசாஜ் சென்டரை நடத்த ஆரம்பித்துவிட்டார். போன வாரம் ஒருநாள், தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று தொழிலதிபர் சொல்லவும், தன் வீட்டுக்கு வரும்படி நிர்மலா கூப்பிட்டிருக்கிறார்.


ஜாலியாக இருந்தார் 
அதன்படி 2 நாளுக்கு முன்னாடி நிர்மலா வீட்டுக்கு சென்றார். அங்கே இருந்த தனது தோழி ஷீலா, மற்றும் ஆட்டோ டிரைவர் மணிகண்டனை தொழிலதிபருக்கு நிர்மலா அறிமுகம் செய்து வைத்தார். பிறகு நிர்மலா, ஷீலாவுடன் கிருஷ்ணமூர்த்தி ஜாலியாக இருந்திருக்கிறார்.

போலீசில் புகார் 
இதனை தொடர்ந்து, திடீரென 4 பேர் கொண்ட ஒரு கும்பல் நிர்மலா வீட்டுக்குள் புகுந்து தொழிலதிபரை கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் நகை, 70 ஆயிரம் ரூபாய் என பறித்து கொண்டு தப்பியது. இதனால் தொழிலதிபர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்தார்.


நிர்மலா செட்டப்  
இதுசம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்மலா, ஷீலா, ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் கொள்ளை கும்பல் நிர்மலாவின் செட்டப் என்று தெரியவந்தது. தொழிலதிபரை மிரட்டி பணத்தை கறந்து 7 பேரும் பங்குபிரித்து கொள்ள பிளான் போட்டிருந்ததும் தெரியவந்தது.

7 பேர் கைது  
இதையடுத்து, இவர்கள் மூன்று பேருடன், கார்த்திகேயன், புகழேந்தி, அருண்குமார், லட்சுமணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவரும் இப்படியே நிறைய பேரிடம் பணத்தை ஏமாற்றி பிடுங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 7 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment