17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் லாக் நகரை சேர்ந்தவர் சவிதா என்ற வசந்தி. இவருக்கு 28
வயதாகிறது.
கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். முதல்
புருஷனுடன் சண்டை போட்டுவிட்டு பிரிந்து வந்துவிட்டார். அதனால் 2-வது
புருஷனுடன் வாழ்கிறார். அவர் பெங்களூருவில் வேலை பார்க்கிறார். அதனால்
சென்னையில் 3 குழந்தைகளை வைத்து கொண்டு வசந்தி தனியாக வாழ்ந்து வந்தார். (தொடர்ச்சி கீழே...)
17 வயது சிறுவன்
ஒருநாள் சொந்தக்காரர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை பார்க்க சென்றார் வசந்தி.
அப்போதுதான் 17 வயசு பையனை முதன்முதலாக பார்த்தார். அந்த நிமிடத்திலேயே 3
குழந்தைகளை பெற்ற வசந்திக்கு சிறுவன் மேல் லவ் வந்துவிட்டது.
புருஷனை கைவிட்டார்
இதையடுத்து அவனிடம் நெருங்கி தவறான முறையில் பேசியும் நடந்து கொள்ள
ஆரம்பித்தார். சிறுவன் கிடைத்த ஜோரில் 2-வது புருஷனையும் கைவிட்டார்
வசந்தி. 3 குழந்தைகளையும் அவரிடமே ஒப்படைத்துவிட்டார்.
காதில் வாங்கவில்லை
பையனின் நடவடிக்கைகளை கவனித்த பெற்றோர் உஷாரானார்கள். கண்டித்து அறிவுரை
சொன்னார்கள். ஆனாலும் இருவருமே அதை காதில் வாங்கி கொள்ளவில்லை. ஒரு
கட்டத்தில் சிறுவனை வீட்டை விட்டுவெளியேற செய்து தன்னுடன் கூட்டிகொண்டு ஊர்
ஊராக சுற்றினார் வசந்தி. அப்போதுதான் பெற்றோர் மகனை காணோம் என்றும் வசந்தி
மீது நடவடிக்கை எடுக்ககோரியும் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.
போக்சோ பாய்ந்தது
இதையடுத்து போலீசாரும் 2 பேரையும் ஊர் ஊராக தேடி வந்து ஒருவழியாக கண்டு
பிடித்துவிட்டனர். வெளியூரில் ஜாலியாக சுற்றி கொண்டிருந்தவர்களை சென்னைக்கு
அழைத்து வந்தனர். சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ், வசந்தியை போக்சோ
சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
புழல் சிறை
சென்னையில் பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவது இது 2-வது
முறையாகும். இதற்கு முன் தேனாம்பேட்டையில் பெற்ற மகளுக்கு தொல்லை கொடுத்த
தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. 2 கணவன்கள், 3 குழந்தைகள் இருந்தும் 17
வயது சிறுவனை தனது இச்சைக்கு பயன்படுத்தி கொண்ட வசந்தி இப்போது புழல்
ஜெயிலில் உள்ளார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு க...
-
மோட்டர் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
-
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை ச...
-
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
-
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு ...
-
"நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!செய்திய...
-
டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி செய்தியை முழுமையாக பட
No comments:
Post a Comment