வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 141 ரூபா தயிர்.. தெரியாம எடுத்து குடிச்சுட்டாங்க.. ஆளை கண்டுபிடிக்க செய்த அமர்க்களம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 08, 2018

141 ரூபா தயிர்.. தெரியாம எடுத்து குடிச்சுட்டாங்க.. ஆளை கண்டுபிடிக்க செய்த அமர்க்களம்



தயிர் பாக்கெட் ஒன்னு காணாம போயிடுச்சு... இதுதான் விஷயம்! அதுக்குத்தான் இவ்வளவு அமர்க்களமும்! தாய்பெய் நகரில் உள்ள சீன கலாசார பல்கலைகழகத்தில் ஒரு பெண் படித்து வருகிறார். 

 
ஒருநாள் சாப்பிடுவதற்காக ஒரு தயிர் பாக்கெட்டை கொண்டு வந்து தனது அறையில் உள்ள டேபிள் மீது வைத்துவிட்டு வெளியே சென்றிருக்கிறார். கொஞ்சம் நேரம் கழித்து வந்து பார்த்தால், அந்த தயிர் பாக்கெட்டை காணோம். அதன் விலை நம்ம ஊர் மதிப்புப்படி ரூ.141. அதனால் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களிடம், "என் தயிர் பாக்கெட்டை எடுத்தீங்களா?" என்று கேட்டார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
போலீசில் புகார்  
அவர்களும் தயிரை பார்க்கவும் இல்லை, எடுக்கவும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அதனால் ரொம்பவே அப்செட் ஆகிட்டார் இந்த பெண். எப்படியாவது அந்த தயிர் பாக்கெட் கிடைத்தே ஆகணும்னு நேராக போலீஸ் ஸ்டேஷன் போனார். என் தயிர் பாக்கெட்டை காணோம், கண்டுபிடிச்சு தாங்க என்று ஒரு புகார் கொடுத்தார். புகாரை வாங்கி பார்த்த போலீசாருக்கு ஒரு செகண்ட்டில் பல்ஸ் குபீரென ஏறி இறங்கி விட்டது.


காலி டப்பா 
பிறகு அப்புகாரின் அடிப்படையில் தயிர் பாக்கெட்டை தேட ஆரம்பித்தார்கள். கடைசியாக தயிர் பாக்கெட் கிடைத்துவிட்டது. ஆனால் தயிரைதான் காணோம். அதாவது தயிர் டப்பா காலியாக விழுந்து கிடந்தது. எனவே தயிரை யாரோ எடுத்திருப்பார்கள் என்று நினைத்து பெண் இந்த விஷயத்தை விட்டுவிடுவார் என்று பார்த்தால், அப்போதும் விடவில்லை. யாராக இருக்கும்?

டப்பாவுக்கு டெஸ்ட்  
அந்த தயிர் எடுத்தது யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அதற்காக அந்த காலி தயிர் டப்பாவில் கைரேகை இருக்கிறதா என போலீசாரை பார்க்க சொன்னார். அதில் எந்த கைவிரல் ரேகையும் கிடைக்கவில்லை என்று போலீசார் சொன்னதும், திரும்பவும் தயிர் டப்பாவுக்கு அடுத்த டெஸ்ட் எடுக்க முடிவானது. அதுதான் மரபணு சோதனை!!


வரிப்பணம் 
ஆனால் இந்த டெஸ்ட் எடுக்க 6 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் தரப்பில் தயிர் டப்பாவுக்கு டிஎன்ஏ டெஸ்ட் நடத்தப்பட்டது. டெஸ்ட் எடுக்காவிட்டால், அந்த பெண் இந்த விஷயத்தை விடுவாரா என்ன? ஆனால் ஊர் ஜனங்க சும்மா இருப்பார்களா? இப்படி ஒரு சின்ன விஷயத்துக்காக எங்கள் வரிப்பணத்தை செலவு செய்வதா? என வெறி ஆகிவிட்டார்கள்.

திட்டி தீர்த்தார்கள்  
இவ்வளவு செலவு செய்றதுக்கு பதிலாக அந்த தயிர் பாக்கெட்டுக்கு பதில் இன்னொரு தயிர் பாக்கெட் வாங்கியிருக்கலாமே என்று திட்டி தீர்த்து விட்டு போனார்கள். டப்பா மேட்டருக்கு எல்லாம் டிஎன்ஏ டெஸ்ட் வரை போய் இருந்தாலும், அந்த தயிரை யார்தான் எடுத்து சாப்பிட்டாங்கன்னு கடைசியா சொல்லி இருக்கலாம்!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment