வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: என் உடம்பு தான வேணும், வா எடுத்துக்கோ... நடுரோட்டில் உக்கிரமடைந்த பெண்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

என் உடம்பு தான வேணும், வா எடுத்துக்கோ... நடுரோட்டில் உக்கிரமடைந்த பெண்


உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, குட்டையோ, மேல் வகுப்பு, கீழ் வகுப்பு என எந்த பாகுபாடும் இன்றி ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு சம பங்கில் அளித்து வருவது இந்த ஒற்றை கொடுமை தான்.
 
 சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோ காட்சி, எந்த அளவிற்கு ஒரு ஆண் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால், அவள் தனது உடையை கழற்றி, உனக்கு என் உடல் தானே வேண்டும் என உக்கிரம் அடைந்திருப்பாள்... என்பதை இந்த உலகிற்கு வெளிகாட்டியுள்ளது... (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


காட்சி! 
 அந்த வீடியோவில் வெளியான காட்சி இதுதான்... கடுங்கோபம் அடைந்த அந்த இளம் பெண். தனது மார் சட்டையை அவிழ்த்து, கீழே தள்ளப்பட்ட ஆணை கண்டு ஏதோ பாஷையில் திட்டுகிறாள், மிகுந்த ஆத்திரத்தில். பிறகு தனது மார்பகத்தை கொண்டு, கீழே விழுந்திருந்த ஆணின் முகத்தில் தேய்த்து... உனக்கு என் உடல் தானே வேண்டும்... எடுத்துக் கொள்.. என தொடர்ந்து திட்டுகிறார்.


தென்கிழக்கு பிரேஸில்!
 இந்த காணொளிப்பதிவு தென்கிழக்கு பிரேஸிலின், ரிபேரா ப்ரோட்டோ நகர மையத்தில் பதிவானது என அறியப்படுகிறது. இந்த காணொளிப்பதிவில்தோன்றிய அந்த நீலநிற சட்டை அணிந்திருந்த இளம் பெண் ஒரு சேல்ஸ் பெண் என்றும். அவர் பொது இடத்தில் தனது வியாபாரம் குறித்த ஃப்ளையர்கள் (Ad Flyers) மக்களிடம் விநியோகம் செய்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.


பாலியல் வன்கொடுமை! 
தரையில் வீழ்ந்திருந்த ஆண் நெடுநேரமாக அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து துளைத்தெடுத்தான் என்றும். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான் என்றும் கூறப்படுகிறது. (பொது மக்களும், யாரும் இதை கண்டு கொள்ளாமல் நகர்ந்துக் கொண்டே இருந்தார்கள்). ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண் உக்கிரமடைந்து. உனக்கு என் உடல் தானே வேணும். வா எடுத்துக் கொள் வா... என அந்த ஆணை தரையில் தள்ளிவிட்டுள்ளார்.


யாரும் எதிர்பார்க்கவில்லை.
 அந்த ஆணை, கீழே தள்ளிய பிறகு தான் கூடியிருந்த மக்கள் கண்விழித்து என்ன நடக்கிறது என காண துவங்கினார்கள். அந்த ஆளை இளம்பெண் சரமாரியாக திட்ட துவங்கினார். நீண்ட நேரமாக என்னை தொல்லை செய்துக் கொண்டே இருக்கிறான் என கூறினார். எனது வேலையை செய்ய விடாமல் சீண்டுகிறான் என கொந்தளித்துள்ளார்.


நான் ஒன்றும் செய்யவில்லை... 
அடி வாங்கிக் கொண்டிருந்த அந்த ஆண், தான் ஒன்றும் செய்யவில்லை. தனது மனைவியுடன் ஷாப்பிங் தான் வந்தேன் என்றும் கூறியுள்ளார். ஆனால், அந்த கடுங்கோபத்தில் இருந்த இளம்பெண், " என்னை ஒரு செக்ஸ் பொம்மை போன்று தானே கண்டாய், எனது மார்பை தீண்ட வேண்டும் என்று தானே என்னை நெருங்கினாய். வா, எடுத்துக் கொள் வா" என தனது மேலாடையை அவிழ்த்து, அந்த ஆணின் முகத்தில் தேய்த்துள்ளார்.


அடி!
 பாலியல் தொந்தரவு கொடுத்த ஆணை கீழே தள்ளி, அடித்து உதைத்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார் அந்த இளம்பெண். பிறகு தனது மேலாடையை எடுத்து அணிந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இந்த மொத்த நிகழ்வையும் கூடி இருந்த கூட்டம் படம் பிடித்தது., வீடியோ எடுத்ததே தவிர, யாரும் அந்த ஆண் சீண்டும் போதும் தடுக்கவில்லை. இந்த பெண் கோபப்படும் போதும் உதவவில்லை.


ஆதரவு! 
 சுற்றியிருந்த மக்களில் வேடிக்கை பார்த்த பலரும், இந்த பெண்ணின் நடவடிக்கையை ஆதரிக்கிறோம். எத்தனை நாள் தான் பெண்கள் பொருத்து போவார்கள் என கூறியுள்ளனர். மேலும், ஒரு பெண் மட்டும், நீ செய்வது அபத்தமாக இருக்கிறது. நகரின் மத்தியில், சிறு குழந்தைகள் கண்ணெதிரே நீ இதுபோன்று நடந்துக் கொள்ளக் கூடாது. இது பெண்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கிறது" என கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.


நாடகம்!
 ஆனால், அந்த ஆண் மற்றும் பெண் என ஒரு மேடை நாடக குழு சேர்ந்த அமைத்த நாடகம் தான் இது. இந்த மொத்த நிகழ்வும் அவர்கள் திட்டமிட்டு செய்த ஒன்று. பாஸ்டோ ரிபேரோ எனும் நபர் தான் இந்த நாடகத்தை உருவாக்கியுள்ளார். உலகம் முழுக்க பொது இடங்களில் வேலை செய்து வரும் பெண்கள், இது போன்ற கொடுமைகள் அனுதினமும் அனுபவித்து வருகிறார்கள். இதை எல்லாம் தடுக்க யார் தான் இருக்கிறார். இந்த தவறுகளை அனைவரும் எதிர்க்க வேண்டும். ஆண்களின் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த நாடகத்தை ஏற்பாடு செய்தோம் என கூறியுள்ளார்.


பெண் சக்தி!
 பெண் என்பவள் பெரும் சக்தி, சமூகத்தின் அடையாளம் என உலகம் முழுக்க வெறும் வார்த்தைகளில் மட்டுமே கூறிக் கொள்கிறோம். ஆனால், அந்த சக்தி தினம், தினம் எத்தனை தடங்கல்கள் மற்றும் கொடுமைகளை எதிர்த்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறது என உங்களுக்கு தெரியுமா என பெண்ணியவாதிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment