நெல்லையில் காரில் கடத்தப்பட்ட மேடை பாடகரை போலீஸார் சினிமா பாணியில்
விரட்டிச் சென்று மீட்டனர். இந்த விவகாரத்தில் மனைவியின் உறவினர்கள் 2 பேர்
கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது
மகன் முத்துப்பாண்டி (31). இவர் மேடைகளில் பாடி வருகிறார். இவருக்கும்
பாளையம்கோட்டையைச் சேர்ந்த குத்தாலிங்கத்தின் மகள் வேலம்மாளுக்கும் (30)
கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அவ்வப்போது தகராறு
ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பெண்
வீட்டார் சார்பில் இருவரையும் சேர்த்து வைக்க எத்தனையோ சமரச பேச்சுக்கள்
நடந்தன. ஆனால் சேர்ந்து வாழ்வதற்கு முத்துப்பாண்டி சம்மதிக்கவில்லை.
(தொடர்ச்சி கீழே...)
சந்தித்து பேச்சு
இந்நிலையில் பாளையங்கோட்டையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நேற்று
முத்துப்பாண்டி இசைக் கச்சேரி நடத்தினார். கச்சேரி முடிந்ததும் வெளியே வந்த
முத்துப்பாண்டியை வேலம்மாளின் உறவினர்கள் சிலர் சந்தித்து பேசினர்.
கடும் தாக்குதல்
அப்போதும் முத்துப்பாண்டி முரண்டு பிடித்தார். இதையடுத்து 4 பேர் சேர்ந்து
முத்துப்பாண்டியை காரில் கடத்தி பல்வேறு இடங்களுக்கு சுற்றினர். அப்போது
தச்சநல்லூர் புறவழிச்சாலையில் காரை நிறுத்திவிட்டு 4 பேரும் சேர்ந்து
முத்துப்பாண்டியை கடுமையாக தாக்கினர்.
அறைக்கு
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் போலீஸார் ஈடுபட்டனர். அவர்கள் இந்த
தாக்குதலை கண்டனர். அதற்குள் அந்த கும்பல் முத்துப்பாண்டியை காருக்குள்
தூக்கி போட்டு கொண்டு வேகமாக சென்றது. போலீஸாரும் அந்த காரை பின்தொடர்ந்து
கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
அலுவலக சாலை
இதையடுத்து வண்ணாரப்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த
பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சக்கரவர்த்தி உள்ளிட்ட குழுவினர் அந்த
காரை கண்டனர். அவர்களும் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். மாலை 6 மணிக்கு
அந்த கார் கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலக ரோடு வழியாக சென்றது.
தப்பியோடியவர்களை
அப்போது போலீஸார் அந்த காரை சுற்றி வளைத்தனர். இதையடுத்து அந்த கும்பல்
ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள சுற்றுச்சுவரில் காரை மோதிவிட்டு
தப்பிஓடினர். முத்துப்பாண்டியை மீட்ட போலீஸார் தப்பியோடியவர்களை துரத்தி
கொண்டு சென்றனர்.
இருவர் கைது
இதில் 2 பேர் மட்டும் அங்குள்ள பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அப்போது
வந்த டவுன் பஸ்ஸில் ஏறியபோது போலீஸார் பஸ்ஸை நிறுத்தி அவர்களை பிடித்தனர்.
விசாரணையில் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த உடையார்
(39), சிங்கிகுளத்தை சேர்ந்த அய்யப்பன் (42) என்பது தெரியவந்தது.
மருத்துவமனையில் அனுமதி
இவர்கள் முத்துப்பாண்டி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழாததால்
கடத்திச்சென்று தாக்கியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து
தப்பியோடிய மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். முத்துப்பாண்டியை
மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவைய...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள...
-
விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட ப...
-
ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் 110 கிலோ மீட்டர் சென்ற ரயில் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரயில்...
-
தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிக...
-
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு மறுமணம் செய்து வைக்கிறார்களாம். ரஜியின் இளைய மகள் சவுந்தர்யா தொழில் அதிபர் அஸ்வினை கடந்த 201...
No comments:
Post a Comment