வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிவப்பு அழகு கிரீம்களுக்கு செக்..!மத்திய அரசின் புதிய திட்டம்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 14, 2018

சிவப்பு அழகு கிரீம்களுக்கு செக்..!மத்திய அரசின் புதிய திட்டம்..!



சிகப்பு அழகு கிரீம் தயாரிப்பவர்கள் ராஜ்ஜியம் விரைவில் முடிவிற்கு வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு, பல விதிமுறைகளை இந்த நிறுவனங்களுக்கு எதிராக கொண்டு வர உள்ளது. எந்த ஒரு மருந்து சீட்டும் இல்லாமல் இந்த கிரீம்களை வாங்குவதைத் தடுக்க வழிவகுத்துவருகிறது. அரசுக்கு இந்த கிரீம்கள் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி எச்சரிக்கை மணி வந்துள்ளது. கிரீம்களில் பல ஊக்க மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இதனால் இதை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் நிறையச் சரும பிரச்சனைகள் வரும். அரசின் அறிக்கை படி இனி மருந்து சிட்டு இல்லாமல் எந்த ஒரு கடையிலும் சிவப்பு அழகு கிரீம்களை வாங்க முடியாது.


மருத்துவரின் அறிவுரை
 இது நடைமுறைக்கு வந்தால் இனி எந்தஒரு காஸ்மெட்டிக், மளிகை சாமான் கடை, மருந்தகம் மற்றும் மால்களில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சிவப்பு அழகு கிரீம்கள் வாங்கமுடியாது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பக்க விளைவுகள்
அரசின் அறிக்கை நுகர்வோர் மற்றும் மருத்துவ மையங்களின் கருத்தின் பெயரிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியன் அஸோஸியேஷன் ஆப் டெர்மடோலோஜிஸ்ட், வேனெரேயோலோஜிஸ்ட்ஸ் மற்றும் லெப்ரோலோஜிஸ்ட்ஸ் (IADVL)-ல் அடங்கும். இந்த அமைப்புகள் சிகப்பு அழகு கிரீம்களினால் பல பக்க விளைவுகள் வரும் எனக் குறிப்பித்துள்ளனர். அதில் சில முக்கியமானவை- சருமத்தில் சிவப்பு படலங்கள், சரும வீக்கம், அரிப்பு, சீரற்ற சருமம், மிகவும் இருண்ட அல்லது ஒளியான சருமம், ரத்த குழாய்கள் தென்படுவது மற்றும் தழும்புகள்.


மத்திய சுகாதார
அமைச்சகம் ட்ராக்ஸ் மற்றும் காஸ்மெட்டிக் சட்டம் 1945-இன் படி மத்திய சுகாதார அமைச்சகம் குடிமக்கள் மற்றும் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அரசின் அறிக்கையில் hydroquinone உள்ள அல்லது hydroquinone இல்லாத ஊக்கங்கள், பிளீச்சிங் பொருள் மற்றும் tretinoin இருக்கும் கிரீம்களை மருத்துவ சீட்டு இருந்தாலும் மற்றுமே வாங்கமுடியும்.

கரும் புள்ளிகளை நீக்கும் 
மேலும் ஒரு மருத்துவர் குறுக்கையில் பெரும்பாலும் இந்த கிரீம்கள் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கும் என மக்களை நம்பவைத்து விற்கப்படுகின்றனர். இப்படிப் பட்ட கிரீம்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கிறது ஆனால் அவர்கள் மருத்துவரிடம் இது அவர்களுக்கு ஏற்றது தான என்று கூட கேட்பதில்லை. கவனக்குறைவினால் அவர்கள் சருமத்திற்கு தான் ஆபத்து ஆகிறது. முக்கியமாக அதில் கலக்கப்படும் ரசாயனங்களால் அவர்கள் சருமத்திற்கு எரிச்சலூட்டும் அதுவும் சூரியஒளியில் செல்லும்போது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment