வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்த நடிகையுடன் டேட்டிங்க் போவீங்களா? - நறுக் பதிலளித்து வேலை வாங்கிய நபர்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 13, 2018

இந்த நடிகையுடன் டேட்டிங்க் போவீங்களா? - நறுக் பதிலளித்து வேலை வாங்கிய நபர்!



வேலை தேடிச் செல்லும் பல இளைஞர்கள் பொது அறிவு பிரிவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி கடைசியில் நேர்காணலின் போது கேட்கப்படும் சாதாரண கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பணி இழப்பது தற்போது வாடிக்கையாகி வருகிறது. நாட்டு நடப்பு, சுய நிலை அறியும் பல கேள்விகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது வெற்றியாளர்களின் அறிவுரையாகும்.

இந்த நடிகையுடன் டேட்டிங்க் போவீங்களா? - நறுக் பதிலளித்து வேலை வாங்கிய நபர்!

இந்த மாதிரியான இன்டர்வியூ ஒன்றில் போட்டியாளரின் மனநிலையை சோதிக்க இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல நடிகைகள் உங்களை டேட்டிங்க் அழைக்கிறார்கள். நீங்கள் ஒரு நடிகையுடன் டேட்டிங்க் போவீர்களா என்று தேர்வாளர் கேள்வி கேட்டார். இது போன்ற கேள்விகள் பல கேட்கலாம். நீங்கள் தன்நம்பிக்கையுடனும், நேரடியாகவும் பதில் அளிக்கிறீர்களா என்பதே அங்கு முக்கியம். இதுபோன்ற கேள்விக்கு பலர், நடிகைகள் எவ்வளவு பெரிய இடம். அவர்கள் நம்மை எங்க கூப்பிடப் போறாங்க. நான் சாதாரணமானவன் என்ற அர்த்தத்தில் பதிலளித்தனர். ஆனால் ஒருவர் மட்டும் தேர்வாளரே பாராட்டும் வகையில் பதிலளித்து வேலையையும் பெற்றார். இதுபோன்ற பத்து கேள்விகளையும் இங்கே காண்போம்.


கேள்வி 1:  
ஒரு வாரத்தில் எந்த நாட்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ? 
பதில்:
இதுபோன்ற கேள்வி சாதாரண நாட்களில் கேட்டாலும் கூட நாம் அனைவரும் அளிக்கக் கூடிய பதில் வெள்ளி, சனி, ஞாயிறு தான். ஏனென்றால் அந்நாளில் தான் நமக்கு விடுமுறை கிடைக்கும். ஆனால், நமக்கு வேலை வழங்வோரிடம் இந்த பதில் அளித்தால் அவ்வளவுதான். வேலையின் மீது நீங்கள் கொண்டுள்ள வெறுப்பை வெளிப்படுத்தியது போல் ஆகிவிடும். மாறாக, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என கூறினால் கேள்விகேட்போருக்கே உங்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டு விடும்.

கேள்வி 2: 
உங்களது கடைசி நிறுவனத்தில் எந்த தவறை செய்து உயர் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டீர்கள் ? 
 இது ஒரு பொதுவான கேள்விதான். உங்களுடைய தரத்தையும் சோதிக்கக் கூடிய கேள்வியாகும். இதற்கு நீங்கள் அளிக்கக் கூடிய பதில் உண்மையில் மாறுபட்டதாகவும், அதே சமயம் உண்மைத் தன்மை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். நீங்கள் செய்ததில் நியாயமான ஒரு தவறு சுட்டிக்காட்டி விடையளியுங்கள்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கேள்வி 3: 
 உங்களுக்கு பொய் கூறும் பழக்கம் உண்டா ? 
சாதாரணமாக இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாது. ஆனால், நேர்முகத் தேர்வின் போது நீங்கள் நடந்துகொள்ளும், கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தினைக் கொண்டு ஒரு வேலை இக்கேள்வி கேட்கப்படலாம். அதுபோன்ற நேரத்தில் நேர்மையான பதிலை வழங்கி விடுங்கள். சிறுவயதில், அல்லது எப்போதாவது தண்டனையில் இருந்து தப்பிக்க கூறியது உண்டு என கூறிவிடுங்கள்.


கேள்வி 4: 
மிருகமா உங்களை மாற்ற ஆசைப்படால் என்ன மிருகமா மாற வேண்டும் 
இந்த மாதிரி எடக்கு மடக்கான கேள்விகள் கேட்பதே உங்களால் சட்டேன சிந்தித்து முடிவு எடுக்க முடிகிறதா என்று தான். இதுபோன்ற கேள்விகளுக்கு சரியான பதில், தவறான பதில் என்றெல்லாம் இல்லை. அதனால், சற்று சிந்தித்து அவுங்களுக்கு ஏற்ற குணங்களுடன் ஒரு மிருகத்தை சொல்ல முடிஞ்சா அற்புதமா இருக்கும். கேட்ட உடனே பதில் சொல்லாம கொஞ்சம் இழுத்து யோசிச்சு பதில் சொன்னா இன்னும் சரியா இருக்கும்.

கேள்வி 5:
 ஒரு வேலை நீங்கள் தூங்கி எழும் போது ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாறியிருந்தால் என்ன செய்வீர்கள் ? 
இக்கேள்வி உங்களின் மனநிலையினை பரிசோதிக்கவே கேட்கப்படுகின்றன என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் பதற்றத்துடன் மருத்துவமனை செல்வேன் ?, வாழ்வை வெறுத்து விடுவேன் போன்ற பதில்களைக் கூறுவதை விட இந்த மாற்றத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். இது எனக்குக் கிடைத்த வரம் என ஏற்றுக் கொள்வேன் என பொறுமையான பதிலை கூறுங்கள். உங்களது குணம் இவற்றின் மூலம் அறிந்துகொள்வர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment