வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாஸ் லக்கேஜ் எங்க காணோம்.. பயணிகளின் பைகளை மறந்து விட்டு புறப்பட்ட விமானம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

பாஸ் லக்கேஜ் எங்க காணோம்.. பயணிகளின் பைகளை மறந்து விட்டு புறப்பட்ட விமானம்!


ஸ்ரீநகரில் இருந்து சென்ற விமானம் ஒன்று பயணிகளின் பைகளை எடுத்து வர மறந்த காரணத்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவை நோக்கி சென்ற விமானத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
 கோஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான G8-213 விமானம்தான் இந்த தவறை செய்துள்ளது. கடந்த சில தினங்களாக இந்தியாவில் வெவ்வேறு விமானங்கள் இப்படி சர்ச்சையில் சிக்கி வருகிறது. உலகம் முழுக்கவே இந்த வருடம் விமானம் சார்ந்து நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
மறந்து விட்டனர் 
 எப்போதும் பயணிகள் தங்களது பைகளை விமான நிலைய அதிகாரிகளிடம் கொடுத்து விடுவார்கள். பின் அதை விமானத்தில் விமான அதிகாரிகள், பைகள் வைக்கும் பகுதியில் வைத்து கொண்டு வருவார்கள். இந்த நிலையில்தான் பயணிகள் பலரின் பைகளை விமானத்தில் ஏற்ற பணியாளர்கள் மறந்துவிட்டனர்.


கொண்டு வருவதாக கூறினார்கள்
 இந்த நிலையில் ஜம்முவில் இறங்கிய பயணிகளுக்கு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. பலரின் பைகள் ஜம்மு கொண்டு வரப்படவில்லை என்பது அங்கிருந்த பயணிகளுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் சண்டையிட ஆரம்பித்தனர்.


ஏமாற்றினார்கள் 
 அங்கிருந்த பயணிகளை சமாதானம் செய்வதற்காக விமான அதிகாரிகள் 1 மணி நேரத்திற்குள் பயண பைகளை கொண்டு வருவதாக உறுதியளித்தனர். ஸ்ரீநகரில் இருந்து வரும் இன்னொரு விமானத்தில் பைகளை கொண்டு வருகிறோம். ஒரு மணி நேரத்தில் விமானம் வந்துவிடும் என்றுள்ளனர்.


என்ன நடந்தது 
 ஆனால் கடைசி வரை விமானத்தில் எந்த பைகளையும் அவர்கள் கொண்டு வரவில்லை. இதையடுத்து இன்று மாலை வந்து பைகளை வாங்கி கொள்ளுமாறு கூறி எல்லோரையும் அனுப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் சில பயணிகள் கோஏர் விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக கூறியுள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment