கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு
ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவையும்
நாம் தான் கையாள வேண்டும். அந்த வகையில் நமக்கு ஏற்படுகின்ற பல வகையான உடல்
மாற்றங்கள் இதில் அடங்கும்.
உடலில் ஏற்படுகின்ற மாற்றத்தை நாம் சாதாரணமாக கருத கூடாது. ஏனெனில்,
ஒரு சிறிய செல்களின் மாற்றம் கூட நமது உயிரையே பறிக்க கூடும். எந்தெந்த
மாற்றங்கள் உடலில் ஏற்பட்டால் நாம் அபாயகரமான நிலையில் உள்ளோம் என்பதை இனி
அறிந்து கொள்வோம். (தொடர்ச்சி கீழே...)
பாதுகாப்பு அவசியம்..!
நமது உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் நமக்கு பல்வேறு விளைவுகளை தர
கூடியதாகும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஏராளமான மாற்றங்கள் நமக்கு
ஏற்படுகிறது. அவை அத்தனையும் நாம் கவனத்தில் எடுத்தியது கொள்ள வேண்டும்.
இவை பெரிய அளவில் வருவதற்கு முன்பே இவற்றை சரி செய்து விட்டால் மிகவும்
சிறப்பு.
புருவ முடி கொட்டுதா..?
சாதாரணமாகவே முடி உதிர்ந்தால் அது பல்வேறு நோய்களுக்கான அறிகுறியாக
இருக்கலாம். அதே போன்று, உங்களின் புருவ முடி கொட்டுவதும் சற்றே மோசமான
அறிகுறியாகும். கண்ணாடி பார்க்கும் போது உங்களின் புருவ முடியில் மாற்றம்
தெரிந்தால் அவை தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். மேலும், வேறு சில
ஹார்மோன்களின் குறைபாடாகவும் இருக்கலாம்.
வறண்ட பாதங்கள்
சரும வறட்சியோ அல்லது தோலில் ஏதேனும் வறட்சி ஏற்பட்டால் அதற்கு காரணம்
வைட்டமின் குறைபாடாக சொல்வார்கள். ஆனால், பாதங்களில் வறட்சி ஏற்பட்டு
வெடிப்பு போன்று வந்தால் உடலில் உள்ள சில முக்கிய சுரப்பிகள் பாதிப்பான
நிலையில் உள்ளது என அர்த்தமாம். அத்துடன் இவை தொற்றுகளினாலும் ஏற்பட
கூடும்.
சிவந்த முகம்
சிலருக்கு கோபத்தால் முகம் சிவக்க கூடும். ஆனால், இது அவ்வளவு பெரிய ஆபத்து
கிடையாது. மாறாக, காரணமே இல்லாமல் உங்களின் முகம் சிவந்தால் கட்டாயம் அதனை
கவனமாக எடுத்து கொள்ளுங்கள். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு
இந்த பாதிப்புகள் இருந்தால் மோசமான நோயாக கூட இருக்கலாம்.
வடிவம் கூட மாறுமா..?
பெரும்பாலும் உடல் உறுப்புகளின் வடிவம் மாறினால் பல வகையான ஆபத்துகள் ஏற்பட
கூடும். குறிப்பாக உங்களின் கால்களின் வடிவம் மாறினால்
அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில், இது எலும்பு சார்ந்த
பாதிப்பாக இருக்க கூடும். சிலர் ஹை ஹீல்ஸ் அணிவதாலும் இந்த பிரச்சினை
ஏற்படும்.
தொண்டை வலி
தொண்டை கரகரப்பாக இருந்தால் நாம் சளி அல்லது இரும்பல் என்றே எண்ணுவோம்.
இதுவே பல நாட்களாக நீடித்தால் குரலில் மாற்றம், தொண்டை வலி, அரிப்பு
போன்றவை ஏற்படும். இவை புற்றுநோயாக கூட இருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே,
தொண்டையில் நீண்ட நாட்களாக ஏதேனும் மாற்றம் தெரிந்தால் பரிசோதனை பெறுங்கள்.
பற்களில் வெள்ளையா..?
நீண்ட நாட்களாக பற்களில் பாதி பகுதியில் மட்டும் வெள்ளையாக இருந்தால் கண்டு
கொள்ளாமல் விடாதீர்கள். இவை ப்ளூரின் அதிகமாக உடலில் இருப்பதால்
ஏற்பட்டிருக்க கூடும். இந்த நிலை நீடித்தால் பற்கள் சொத்தையாக மாறி விழ
தொடங்கும்.
வறண்ட உதடுகள்
சிலருக்கு உதடுகள் வறட்சி பெற்று, எப்போதும் தோல் உரித்தலாகவே இருக்கும்.
இது போன்று இருந்தால் கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள். வைட்டமின் சி, எ, ஈ
போன்றவற்றின் குறைபாடாக கூட இருக்கலாம். மேலும், சில மோசமான தொற்றுகளினால்
கூட இப்படி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, இது போன்ற இருந்தால்
மருத்துவரை சந்திப்பது நல்லது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, கு...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக ...
-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் ...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்த...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்...
-
விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட ப.
No comments:
Post a Comment