வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பார்சலில் சாணி! செருப்பு ! சோப்பு ! எல்லாம் ஆன்லைன் கொடுமை.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 01, 2018

பார்சலில் சாணி! செருப்பு ! சோப்பு ! எல்லாம் ஆன்லைன் கொடுமை.!



முன்பு எல்லாம் ஏதாவது ஆன்லைனில் அல்லது டெலிமார்க்கெட்டிங்கிலோ நாம் வேண்டிய பொருளை ஆடர் செய்தால், அந்த பொருள் தான் வரவேண்டும். ஆனால் ஏமாற்றும் நிறுவனங்களிடமிருந்து முன்பு எல்லாம் செங்கல், செருப்பு, என்று வந்தது அதிர்ச்சியளித்தது.

தற்போது ஆன்லைனில் சென்று ஆடர் செய்தால், சாணி, செருப்பு எல்லாம் வருது. நாம் ஆடர் செய்த பொருட்களுக்கு இவர்கள் கொடுப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது எல்லாம் ஆன்லைன் பார்சலில் கொடுமையாக பார்க்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் தான் மனம் வெந்து இருப்பார்கள்.! தற்போது சோப்பும் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

சாணி வந்த வினோதம்: 
 கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருவர் ஆன்லைனில் சான்வெச் ஆடர் செய்துள்ளார். அப்போது அந்த சான்வெட்ச் அருகில் சாணியை வைத்து கொடுத்துள்ளனர். மேலும் ஒரு வாடிக்கையாளருக்கு பார்சலில் ஆடர் செய்த பொருளுக்கு பதிலாக சாணியை வைத்தே அனுப்பி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியூட்டினர். 



பிறகு செருப்பு: 
 ஆன்லைனில் வேறு ஏதோ பொருள் வாங்க ஆடர் செய்து, காத்து இருந்தவருக்கு செருப்பை வைத்து அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதுபோன்ற கூத்துக்கள் ஆன்லைனில் மட்டும் தான் நடக்கின்றது.


சோப்பு வந்த வினோதம்: 
தற்போது ஒருவர் ஆன்லைனில் ஸ்மார்ட் போன் ஆடர் செய்துள்ளார். அவருக்கு இதற்கு பதிலாக சோப்பு கட்டிகள் வந்துள்ளது. இதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த வினோத சம்பவத்தை பார்க்கலாம் வாருங்கள்.!


அமேசானில் ஆடர்:
 உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் மூலம் மொபைல் போன் ஒன்றை கடந்த 23ஆம் தேதி ஆர்டர் செய்தார். 4 நாட்கள் கழித்து அவருக்கு அமேசானிலிருந்து வந்த பார்சலில் மொபைலுக்குப் பதில் சோப்புக்கட்டி ஒன்று இருந்திருக்கிறது.
காவல் நிலையத்தில் புகார்:
 உடனே அவர் அருகில் உள்ள பிஸ்ரா காவல் நிலையத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி அமித் அகர்வால், தர்ஷிதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பிரதீப் குமார், ரவிஸ் அகர்வால் மற்றும் பார்சலை டெலிவரி செய்த அனில் ஆகியோர் மீது புகார் அளித்துவிட்டார்.



அமேசான் நிறுவனம் அறிவிப்பு:
 போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பி அளிப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியிருக்கிறது.


இதுபோன்று வருவதால் அதிர்ச்சி:
 முன்பு சாணி, செருப்பு உள்ளிட்ட அதிர்ச்சியளிக்கும் வகையில் வருவதால் ஆடர் செய்வோர் அதிர்ந்து போயியுள்ளனர். இந்த நிறுவனங்கள் மீது எப்படி இதுபோன் தவறுகள் நடக்கின்றது என்று கண்டறிய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment