நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர்
எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு
அப்பர்-மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். நான் சொல்லாமலேயே, நான்
செல்லமாக வளர்ந்தவள், வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என பலர்
எண்ணுகிறார்கள்.
உண்மையும் அதுதான்.
ஆனால், நான் வேண்டாத சில விஷயங்களும் எனக்கு கிடைத்துள்ளது. அதை பற்றி நான்
வெளியே பேச கூட முடியாத நிலை. எனது குழந்தை பருவ நாட்கள் மிகவும் அழகானவை,
அற்புதமானவை. ஆனால், இரவு மிகும் அசௌகரியமானது, சித்திரவதையானது.
அந்த நினைவுகள் என்னுள் பல ஆழமான மறையாத வடுக்களை உருவாக்கி சென்றுள்ளது.
இன்னும் நான் அதை எப்படி கையாள்வது என அறியாதிருந்தேன்....
(தொடர்ச்சி கீழே...)
(தொடர்ச்சி கீழே...)
தாய், தந்தையுடன்...
சிறுவயதில் நான் எனது தாய், தந்தையுடன் தான் உறங்குவேன். என் உடன்
பிறந்தவர்கள் பக்கத்து அறையில் படுத்து உறங்குவார்கள். அப்போது நான்
இரண்டாவது அல்லது மூன்றாவது படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது தான்
எனது பெற்றோர் பற்றி நான் ஒன்று கண்டறிந்தேன்.
சில சமயங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது உண்டு.
அதனால் பாதிக்கப்பட்டவள் நான். நான் படுத்தவுடன் உறங்கிவிடுவேன் என எனது
பெற்றோர் கருதினர். ஆனால், நடுராத்திரியில் அந்த சப்தம் கேட்கும் போது
என்னால் அந்த நேரத்தில் விழித்துக் கொள்ள முடியாத நிலை தான் இருந்தது.
பரிதாபகரமான நிலை...
நானும் எனது தந்தையும், எனது தாய் மற்றும் உடன் பிறந்தோர் உறங்க செல்லும்
முன்னரே படுக்கையறைக்கு சென்றுவிடுவோம். எனது அம்மா அவரது வீட்டு வேலைகளில்
பிஸியாக இருப்பார். உடன் பிறந்தோர் பள்ளி பாட வேலைகள் செய்துக்
கொண்டிருப்பார்கள்.
நான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பிறகு அவர் அனுதினமும் எனது தாயை
வற்புறுத்துவார். தினமும் இது நடக்கும், இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
என தெரியாது. எனது தாய் பரிதாபகரமாக சப்தமிடுவார். அவருக்கு வலிக்கிறது
என்று மட்டும் தான் நான் அறிவேன். சில காலம் கழித்து தான் அது எதனால் என
நான் அறிந்துக் கொண்டேன்.
அசௌகரியம்!
இது தான் காரணம் என அறிந்த பிறகு இரவு மட்டுமல்ல, பகலிலும் நான் எனது
தந்தையை வெறுக்க ஆரம்பித்தேன். ஆனால், இதுகுறித்து என்னால் வெளியே பேச
இயலவில்லை. நான் நடுராத்திரியில் உடல்நலம் சரியில்லாதது போல நடிக்க
துவங்கினேன். அவர்கள் நான் பயந்து போய் இருப்பதாக கூறினார்கள்.
வேண்டுமென்றே நாடு ராத்திரியில் எழுந்துக் கொள்வேன்.
என் தாயை அவரிடம் இருந்து காக்க, என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தும்
செய்தேன். ஆயினும், பல நாட்கள் அவர் விருப்பம் போலவே தொடந்தது.
மூன்று வருடங்கள் இப்படி தொடர்ந்தது...
இதில் பெரும் கொடுமையே, இது குறித்து யாரிடம் எப்படி கூறுவது என
அறியாதிருந்தது தான். என் உடன் பிறந்தோர் என்னைவிட மிகவும் வயது
மூத்தவர்கள். நான் அவர்களுடன் அவ்வளவு நெருக்கமாகவும் இருந்தது இல்லை.
நண்பர்கள் அல்லது ஆசிரியர்களிடம் இந்த கேள்வியை எப்படி கேட்பது என்றும்
தெரியவில்லை. பணியாள், ஓட்டுனர் என யாரிடமும் இதுகுறித்து நான் ஆலோசிக்க
முடியாது. குழந்தைகள் இதுகுறித்து பேச கூடாது என்பது நமது சமூகத்தில்
எழுதப்படாத சட்டம். ஆனால், என் வாழ்வில் இது பெரிய பிரச்சனை.
ஏழாம் வகுப்பு!
நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நான் நிரந்திரமாக எனது
உடன் பிறந்தோருடன் உறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் இரு அறைகளுக்கு
மத்தியில் பல சுவர்கள் இருந்தன. ஆனால், எனது எண்ணம் முழுக்க அவர்களது
படுக்கையறை பற்றியே இருந்தது.
இயல்பு...?!
எனது தாயின் பாதுகாப்பு குறித்து நான் மிகவும் ஆலோசித்தேன். நான் கொஞ்சம்,
கொஞ்சம் வளரும் போது தான் செக்ஸ் என்றால் என்ன, அந்த ஆக்டிவிட்டி என்ன
என்பது அறிய துவங்கினேன்.
திருமணத்திற்கு பிறகு இது மிக இயல்பு என்பதை உணர்ந்தேன்.
ஆனால், திருமண வாழ்வென்பது இது மட்டும் தான் என்றால், எனக்குக் அப்படி ஒரு
பந்தமே தேவையில்லை.
குடி!
நான் பிறக்கும் முன்னர் அனைவரும் தாத்தா- பாட்டி வீட்டில் இருந்ததாகவும்,
அப்போது எனது தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து, எனது தாயை செக்ஸ்
வைத்துக் கொள்ள தொல்லை செய்வார் என்றும் எனது உடன் பிறந்தோர் கூறி
அறிந்தேன். என் தாய் உதவியின்றி தவித்தார் என்பதை நான் மிகுதியாக
கண்டுணர்ந்தவள்.
அச்சம்!
இன்னும் சில வருடங்களில் என் தந்தை எனது திருமணத்தை பற்றி பேச்சை
துவங்குவார், அவரிடம் என்ன பதில் கூறுவது என தெரியவில்லை. ஒருவேளை
சிலருக்கு இது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், என்னை பொறுத்தவரை
எனக்கு இது மிகப்பெரிய அச்சம். என் தந்தை எனது தாய்க்கு செய்தது
மிகப்பெரிய கொடுமை.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம.
No comments:
Post a Comment