மெரினா கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று, மக்களை பீதிக்குள்ளாக்கும் ஒரு
சம்பவம் நடந்தேறியது. மாலை வேளையில் அந்த பக்கமாக வாக்கிங் சென்ற பலரும்
குடும்பத்தோடு சென்றவர்களும் இதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர் .
அலையோடு அலையாக, பொங்கிப், பொங்கி நுரை தள்ளிக் கொண்டு வந்தது. அதைப்
பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சோப்பு நுரை போல பொங்கி காணப்பட்டது மட்டுமின்றி மெரினா கடலின் தண்ணீர்கூட
அடர்ந்த பழுப்பு நிறமாக மாறியது.
கலர் மாறிய கடல்
இந்த மாற்றங்கள் மக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கியது. குறிப்பாக கடலின்
உள் பகுதியில் இவ்வாறு கடலின் வண்ணம் மாறியதை தெளிவாக பார்க்க முடிந்ததாக
அதை நேரில் பார்த்த மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
கூவம் கழிவுகள்
(தொடர்ச்சி கீழே...)
கூவம் கழிவுகள்
இதுபற்றி தேசிய கடலோர ஆய்வு மையத்தின் இயக்குனர் ரமண மூர்த்தி, கூறுகையில்,
இது போல கடலில் மாற்றம் மற்றும் நுரை ஏற்படுவது என்பது பருவமழை காலத்தின்
ஆரம்பத்தில் இயல்பாக ஏற்படக்கூடியதுதான். கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில்
இருந்து வரக்கூடிய கழிவுகள் கடலில் சேர்கிறது. அப்போது கடலில் வீசும்
கடுமையான காற்று காரணமாக இவ்வாறு நுரை கரை ஒதுங்குகிறது, என்று அவர்
விளக்கம் அளித்தார்.
பெங்களூர் சம்பவம்
பெங்களூரின் பெல்லந்தூர் ஏரியில் அவ்வப்போது இதுபோல நுரை பொங்கி கரை
ஒதுங்கும். இதனால் சாலையில் வாகனங்கள் கூட போக முடியாது. இதற்கு காரணம்
நகரில் உள்ள கழிவுகள், சாக்கடை கால்வாய் மூலமாக ஏரிகளை சென்றடைவதுதான்.
மெரினா சூழல்
இந்த காரணத்தால் அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீவிர நடவடிக்கை
எடுத்து, மாசுக்களை குறைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போது
சென்னையிலும் இதுபோன்ற பிரச்சினை தலை தூக்கி உள்ளது. இது மெரினாவின்
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள்
சூழலியலாளர்கள்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யு...
-
[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளி...
-
பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப்...
-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்...
-
பாலிவுட்டில் அதிக வயது வித்தியாசமுள்ள ஜோடி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது. பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவர் தனது தங்கை வயது மக...
-
கள்ளக்காதலியை கொலையும் செய்துவிட்டு, சடலத்துக்கு பக்கத்திலேயே விடிய விடிய விழித்து கொண்டு உட்கார்ந்திருந்திருக்கிறார் ஒருவர்!! தி...
-
நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி ...
-
காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். புதுச்சேரிக்கு இன்று பள்ளி ...
-
தொடர் மழை காரணமாக நாளை சென்னை மாவட்டத்திற்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக காலை தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment