"நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை
கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!
ரித்விகா!! ஆடம்பரம் இல்லாத எளிய முகம். இவரை பார்க்கும்போதெல்லாம் நம்ம
வீட்டு பெண்ணை பார்ப்பது போன்றே ஒரு உணர்வு!சில படங்களே நடித்தாலும்
அத்தனையும் பேசப்பட்ட படங்களே.
எனினும் நடிகையாகவே அறியப்பட்ட ரித்விகா, பிக்பாஸ் மூலம் அதிக புகழுக்கு சென்றார். இதற்கு காரணம், தன் யதார்த்த இயல்பும், யாரையும் நோகடிக்காத பண்பும், விட்டுக்கொடுத்துப் போன பண்பும்தான்.
(தொடர்ச்சி கீழே...)
அவமானங்கள்
நிறைய இன ரீதியான அவமானங்களையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா சந்திக்க
தவறவில்லை. ஆனாலும் பொறுமை என்ற ஆயுதத்தை கடைசி நாள் டைட்டில் வாங்கும்வரை
கெட்டியாக பிடித்து கொண்டிருந்தார்.
பகிரங்க விமர்சனம்
ஆனால் இந்த டைட்டிலை ரித்விகா பெற்றவுடன், அதற்கும் விமர்சனங்கள் எழ
ஆரம்பித்தன. சிலர் ரித்விகா என்ன சாதி என்றும், குறிப்பிட்ட சாதியை
சேர்ந்தவர் என்பதால்தான் பிக்பாஸ் டைட்டில் கிடைத்துள்ளது என்றும்
இணையத்தில் பகிரங்கமாகவே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.
கண்டுபுடிச்சுக்கோங்கடா
இந்த சாதி மிருகங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு ட்வீட் போட்டு பதிலடி
தந்துள்ளார் ரித்விகா. தனது ட்விட்டரில், "
"ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை
சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று
விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை.
நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி
கண்டுபுடிச்சுக்கோங்கடா.." என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.
சரியான சவுக்கடி
என்ன சாதி என்று கேட்டு கேட்டு குடைந்தவர்களுக்கு ரித்விகாவின் இந்த சவுக்கடி போதுமா என்று தெரியாது.
ஆனால் இப்படிப்பட்ட சாதிய மிருகங்களுக்கு இதுதான் பதில் என்று மட்டும் நன்றாக தெரிகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்த...
-
Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
-
30 வயசு பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஏட்டையாவை போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். என்எஸ்கே நகரிலிருந்த...
-
[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்திகளை படிக்க இங்கு கி...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலை...
No comments:
Post a Comment