96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகர்கள் யாரும்
விரும்பவில்லையாம்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான
சூப்பர் ஹிட் படமான 96-ஐ தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். படத்தின்
தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் தில் ராஜு பெரிய நடிகர்
ஒருவரை ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்.
96 ரீமேக்கில் நானி நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது.
சமந்தா
தில் ராஜு நானி, சமந்தா ஆகியோரை வைத்து 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய
விரும்பினாராம். இருவரையும் அழைத்து படத்தை போட்டுக் காண்பித்தாராம்.
படத்தை பார்த்த நானி ஃபீல் ஆகி கண்ணீர் விட்டாராம். மேலும் இந்த படத்தில்
நான் நிச்சயம் நடிக்கிறேன் என்று அவர் ராஜுவுக்கு வாக்குறுதியும்
அளித்தாராம்.
(தொடர்ச்சி கீழே...)
ஹீரோ
96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறேன் என்று கூறிய நானி பின்னர்
முடியாது என்று கூறிவிட்டாராம். இதையடுத்து விஜய் சேதுபதியின்
கதாபாத்திரத்தில் நடிக்குமாறு ஷர்வானந்த் முதல் பல ஹீரோக்களிடம் தில் ராஜு
கேட்டும் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
என்ன காரணம்?
ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர்கள் தயங்குவதற்கு என்ன
காரணம் என்று தெரியவில்லை. ஒன்று விஜய் சேதுபதி அளவுக்கு நடிக்க முடியுமா
என்று நினைக்கலாம் இல்லை என்றால் ரீமேக்கில் நடிக்க விருப்பம் இல்லாமல்
இருக்கலாம். அதுவும் இல்லை என்றால் ஒரிஜினல் படத்துடன் ஒப்பிட்டு பார்த்து
கலாய்ப்பார்களோ என்று நினைக்கலாம்.
சமந்தா
96 படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்த சமந்தாவே அதை ரீமேக் செய்யக் கூடாது
என்று தெரிவித்தார். முன்னதாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை
தெலுங்கில் ரீமேக் செய்தனர். ஆனால் பிரேமம் போன்று அந்த படம் இல்லை என்ற
விமர்சனம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி தான் தெலுங்கு
படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளாரே. பேசாமல் அவரையும், த்ரிஷாவையும்
வைத்தே ரீமேக் செய்யலாமே.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவைய...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள...
-
விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட ப...
-
ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் 110 கிலோ மீட்டர் சென்ற ரயில் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரயில்...
-
தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிக...
-
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு மறுமணம் செய்து வைக்கிறார்களாம். ரஜியின் இளைய மகள் சவுந்தர்யா தொழில் அதிபர் அஸ்வினை கடந்த 201...
No comments:
Post a Comment