நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக்
கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானது தற்போது
நாகைக்கு கடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை -
நாகை இடையே நவம்பர்-15 அன்று கரையை கடக்கும். இதன் கரணமாக நவம்பர் 14-ம்
தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும்.
கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை,
காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90
கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீட்டர்
வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன்
காணப்படும்.
தஞ்சை, திருவாரூர், நாகை,
காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில
இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடல் அலையின் உயரம் இயல்பை விட
ஒரு மீட்டர் அதிகமாக இருக்கும். மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை கடலுக்கு
செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இந்நிலையில்,
கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,
கடலூர் , விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில்
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான அறிவிப்புகளை
வெளியிடுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட ப...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
கணவன், மனைவி உறவின் நடுவே ஒளிவுமறைவு இருக்க கூடாது என்று கூறுகிறது நம் சமூகம். ஆனால், இங்கே எல்லாருடைய உறவும் இப்படி இருக்கிறதா என்...
-
"என் பொண்ணுகூட அந்த ரூமில் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வாங்களேன்" என்று ஆண்களிடம் சொல்லி சொல்லியே அவர்களிடம் பணத்தை மிரட்...
-
செம போதையில் தள்ளாடியபடியே ட்யூட்டிக்கு வந்த அரசு டாக்டர் பத்தின செய்திதான் இது!! திருவையாறு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த திங்கட்கிழம...
-
ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் 110 கிலோ மீட்டர் சென்ற ரயில் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரயில்...
No comments:
Post a Comment