வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சென்னையை அடுத்தடுத்து 7 புயல்கள் தாக்கப்போகிறதா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 19, 2018

சென்னையை அடுத்தடுத்து 7 புயல்கள் தாக்கப்போகிறதா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்



சென்னையை, 7 புயல்கள் தாக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் உலவும் செய்திகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
 சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், 7 புயல்கள் சென்னையை தாக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த, பாலச்சந்திரன், "இவ்வாறான தகவல்களில் உண்மை கிடையாது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
வங்கக் கடலில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக மட்டுமே வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில், அக்டோபர் 1 முதல் நவம்பர் 20ம் தேதிவரை பெய்த மழை அளவு, வழக்கமாக இதே காலகட்டத்தின், இயல்பை விட 20 சதவீதம் குறைவாகும். சென்னையில், 60 சதவீத மழைப் பற்றாக்குறை உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment