வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 01, 2018

ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!



கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் நவம்பர் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 30

பதவி: இளநிலை ஆய்வாளர்

 தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.  (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.65,500

 விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு  செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019

கட்டணம்: கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.150 மற்றும் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கிகள் மூலமாவும் செலுத்தலாம். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் பதிவுக்கட்டணம் என்ற முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
 


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2018


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment