வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: யாரும் நுழைய முடியாத ரூம் நம்பர் 39-க்குள் நடக்கும் கேவலங்களும்; உலக அரசியலும்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 15, 2018

யாரும் நுழைய முடியாத ரூம் நம்பர் 39-க்குள் நடக்கும் கேவலங்களும்; உலக அரசியலும்.!



ஒரு நிலையான ஆட்சிக்கு சொந்தமான நாடல்ல என்பதை அந்நாட்டு அதிபரான கிம் ஜொங் உன் முகத்தை பார்த்தாலே புரியும். சர்வாதிகாரம் மிக்க வடகொரியாவை அழிக்கும் நோக்கத்திலேயே - சமீபத்தில் மட்டுமின்றி - பல வருடங்களாக அதன் மீது பல்வேறு வகையான சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.


அந்த தடைகளின் வழியாக வடகொரிய குடிமக்களுக்கு இடையே கிளர்ச்சி ஏற்படவேண்டும் அல்லது வடகொரியாவின் "ஹிட்லர்" ஆட்சி முற்றிலுமாக சரிவை காண வேண்டும் என்பது தான் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான பிராதன பின்னணியாகும்.


எதனால் சாத்தியம்.?  
இதுபோன்ற உலக அரசியல் வேறொரு நாட்டின் மீது திணிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அந்நாடு தன் சொந்த மக்களுக்கு உணவு கூட அளிக்க முடியாத நிலைக்கு வந்திருக்கும். ஆனால், வடகொரியாவும் அதை ஆளும் கிம் ஜொங் உன்-னும் எதற்கும் நிலைகொலையவில்லை. அதெப்படி சாத்தியம்.? எதனால் சாத்தியம்.? என்றெல்லாம் யோசித்தால் அதற்கு பின்னால் மறைந்துகிடக்கும் ஒரு பதில் தான் - ரூம் 39.!
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அணுவாயுத சோதனைகளை நிகழ்த்தி 
அவ்வப்போது உலக நாடுகளை மிரட்டும் அளவிலான அணுவாயுத சோதனைகளை நிகழ்த்தி, எப்போதும் தான் உயிர்த்திருப்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கும் வடகொரியாவின் ஆட்சியானது, ஒரு நிலைப்பாடு இல்லாமல் மிதந்து கொண்டிருந்தாலும் கூட ஒருபொழுதும் தத்தளித்தில்லை, மூழ்கியதுமில்லை.

ரூம் 39 
இதெப்படி சாத்தியம் என்ற காரணம் சிறிது காலமாக யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அறியப்பட்டுள்ளது. பியோங்யாங்கில் உள்ள ஒரு அறைக்குள் என்னென்ன விளைவுகள் நடக்கிறது என்பது தான் வடகொரியாவின் நிலைத்திருப்பிற்கான காரணமாய் திகழ்கிறது. அதென்ன அறை.?


தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் 
 பியோங்கியாங்கின் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் ரூம் 39 என்றவொரு அறை இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த அறையைப்பற்றி பேசுவதற்கு முன், ஒரு விடயத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

சொந்த நாணயம் அடிப்படையில் பயனற்றது  
அதாவது, அமெரிக்க டாலர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் மூலமாகவே பொருளாதார அடிப்படையில் வட கொரியாவால் வாழ முடியும். அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கள்ள பணத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் அவற்றின் சொந்த நாணயம் அடிப்படையில் பயனற்றது. அதைக்கொண்டு அவர்களால் எதையும் வாங்க முடியாது.

சீன சந்தைகளின் வழியாக 
சீன கறுப்புச் சந்தையில் வடகொரியாவின் கள்ள பணம் புழங்குகிறது, அதாவது விற்கப்படுகிறது. இப்படித்தான் வட கொரியாவின் பொருளாதாரம் சீன சந்தைகளின் வழியாக முடுக்கி விடப்படுகிறது. வடகொரியாவின் கள்ள பண உருவாக்கம் மிகளும் இடம் தான் - ரூம் 39.!


முற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்க
வட கொரியாவின் மற்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளும் கூட, எடுத்துக்காட்டிற்கு ஹார்ட் ட்ரக்ஸ்களை (கடுமையான மருந்துகளை) ஏற்றுமதி செய்வது உட்பட எல்லாமே இந்த ரூம் 39-ல் தான் செயல்படுத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. வர்த்தக கட்டுப்பாடுகள், சுற்றுலாவிற்கு தடைகளை சந்திக்கும் வடகொரியா அதன் விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளது. இதிலிருந்தே ரூம் 39-க்குள் முற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்கள் நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

அணு ஆயுத பயன்பாடு 
ரூம் 39 பற்றிய கருத்துக்கள் எல்லாமே வட கொரியாவின் தவறுகள் காரணமாக எழுந்தவைகள் என்றே வைத்துக்கொண்டாலும் கூட வடகொரியா அரசாங்கம் ரூம் 39 ஆனது வெளிப்புற ஆதரவை ஈர்க்கும் பியோங்யாங் திறன் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று விவரிக்கிறது. "வெளிப்புற ஆதரவு" என்று வடகொரியா அரசு குறிப்பிடுவது "அணு ஆயுத பயன்பாடு" என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

சற்று தீவிரமாகவே கையாளுகிறது 
கிம் ஜொங் உன்-னின் வேடிக்கையான ஹேர்கட்டை பார்த்து நாம் தான் நகையாடி கொண்டிருக்கிறோம். சர்வதேச காப்பீட்டு மோசடி மற்றும் கருப்பு சந்தை ஆயுதங்கள் என பல நம்பமுடியாத வேலைகளை பின்னணியில் செய்யும் வடகொரிய அரசையும், சர்வாதிகார கிம் ஜொங் உன்-னையும் இதர நாடுகள் சற்று தீவிரமாகவே கையாளுகிறது என்பது தான் நிதர்சனம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment