30 வயசு பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஏட்டையாவை போலீஸ்
அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.
என்எஸ்கே நகரிலிருந்து போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு ஒரு போன் வந்தது. அதில்
பேசிய ஒரு பெண், என் வீட்டுக்குள்ள ஒரு மர்ம ஆள் நுழைந்து பணத்தையெல்லாம்
திருடிட்டார்.
ஆனால் அவரை நான் தப்பிச்சி போகாம பிடிச்சி வெச்சிருக்கேன்"
என்று சொன்னார்.
இதனால், போலீசார் புகார் சொன்ன பெண்ணின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கே பெண்
சொன்னதுபோலவே சம்பந்தப்பட்ட நபரையும் போலீசார் பிடித்து கைது செய்து
விசாரித்தனர்.
பணம் பறித்த ஏட்டு
அப்போது அந்த நபர் சொன்னதாவது: "இந்த பெண் விபச்சாரம் செய்பவர், இவர்தான்
என்னை விபச்சாரத்துக்கு அழைத்தார். ஆனால் அதற்கான பணத்தை ஒரு ஏட்டு பறித்து
கொஸ்டேஷனுக்கு ண்டு போய்விட்டார்" என்றார். ஏட்டு என்றதும் போலீசாருக்கு தூக்கி
வாரிப்போட்டது. அதனால் அந்த பெண்ணை அழைத்து சென்று
விசாரித்தனர். அவரது செல்போனையும் வாங்கி ஆய்வு செய்தனர்.
பெண்ணுடன் பழக்கம்
அதில் கோயம்பேடு காவல் போலீஸ் ஸ்டேஷனில் வேலைபார்க்கும் ஏட்டையா
பார்த்திபனிடம் அந்த பெண் அடிக்கடி பேசியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து
அந்த பெண்ணிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். அப்போது அந்த
பெண் சொன்ன விஷயங்களை கேட்க கேட்க காவல்துறையே அதிர்ந்து விட்டது. ஏட்டையா
பார்த்திபனுக்கு விபச்சாரம் செய்து வரும் இந்த பெண் ரொம்ப நாள் பழக்கமாம்.
தகவல் அளிப்பார்
அதனால் ரெண்டு பேரும் சேர்ந்துதான் விபச்சார வியாபாரத்தை சூடு பறக்க
சென்னையில் பரப்பி உள்ளார்கள். இதற்கென ஏட்டையா ஒரு வீட்டையே வாடகைக்கு
எடுத்து அந்த பெண்ணை தங்க வைத்திருக்கிறார். வெளி இடங்களுக்கு சென்று
கஸ்டமர்களை அந்த பெண் வீட்டுக்கு அழைத்து வருவாராம். அப்படி வரும்போது
ஏட்டையாவுக்கு தகவலும் சொல்லி விடுவாராம்.
(தொடர்ச்சி கீழே...)
பணத்தை கறந்துவிடுவார்
ஏட்டையாவும் ரெய்டுக்கு போவது போல பெண்ணின் வீட்டுக்கு போவாராம்.
அங்கிருக்கும் கஸ்டமர்களிடம், கைது செய்யாமல் இருக்க, பணத்தையும்
அந்நபரிடம் கறந்து விடுவாராம். இப்படியே பிழைப்பு ஓடியிருக்கிறது. அதில்,
கஸ்டமர்கள் யாருமே இல்லையென்றால் ஏட்டையாவே அந்த பெண்ணுடன் ஜாலியாக
இருப்பாராம்.
திருடன் என சித்தரிப்பு
நேற்றிரவும் இப்படித்தான் ஒருவர் அந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்.
வழக்கம்போல் ஏட்டையா பணத்தை கஸ்டமரிடம் வாங்கி சென்றுவிட்டார். அதற்கு
பிறகும் அந்த பெண் கஸ்டமரிடம் பணம் கேட்கபோய் அது தகராறாக போய்விட்டது.
இதனால் அந்த பெண் வந்த கஸ்டமரை "திருடன்" போல போலீசிடம் காட்டி கொடுக்க
முயன்றுள்ளார். பிறகுதான் ஏட்டையா மாட்டிக் கொண்டது.
ஏட்டு சஸ்பெண்ட்
இந்த விவரங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை உயரதிகாரிகள், ஏட்டு
பார்த்திபனை சஸ்பெண்ட் செய்தார்கள். வழிப்பறி, கொலை மிரட்டல் மற்றும்
விபச்சார தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் இவர் மீது 3 பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
மனைவி வாடைகைக்கு கிடக்கும்..மக்களை அதிர்சியில் ஆழ்த்திய விளம்பரம்... HL rental Wife செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய...
-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யு...
-
[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளி...
-
Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
-
இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்த...
-
பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப்...
-
தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாத...
-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
No comments:
Post a Comment