வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழகத்தை தாக்க இருக்கும் அடுத்தடுத்து புதிய 2 புயல்கள் சென்னை வானிலை மையம் அறிவிப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 18, 2018

தமிழகத்தை தாக்க இருக்கும் அடுத்தடுத்து புதிய 2 புயல்கள் சென்னை வானிலை மையம் அறிவிப்பு



கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்க கடலிலில் உருவான குறைந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 11 ஆம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என பெயர் வைக்கப்பட்டது.

கடந்த 5 நாட்களாக தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்த கஜா புயல் இன்று( வெள்ளி கிழமை) காலை 9:30 மணி அளவில் அதிராம்பட்டினம் அருகே கரையை கடந்தது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணி நேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் நிலவரப்படி 23 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில் அடுத்து அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகி உள்ளது. தெற்கு வங்கக்கடலில் நவம்பர் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியார்களிடம் கூறியதாவது

கஜா புயல் காலை 11 மணிக்கு வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது இதனையடுத்து தெற்கு வங்கக்கடலில் நவம்பர் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.



மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
மீனவர்கள் இன்று மதியம் முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம். நவ.18 முதல் 20-ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.

என்று செய்தியாளர்களிடம் கூறினார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment