சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தமிழ்ராக்கர்ஸ் இன்று
வெளியான 2.0 படத்தை வெளியிட்டது. லைக்கா நிறுவனம் தமிழ் ராக்கர்ஸை சுட்டி
காட்டியும் தடை உத்தரவு வாங்கியுள்ளது குறிப்பிட தக்கது.
இதைத்தொடர்ந்து சுமார் 3 ஆயிரம் இணைய தளங்களுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ராக்கர்ஸ் தற்போது டொமைன் முகவரியை மாற்றி
வெயிட்டு ஒரு புறம் இன்ப அதிர்ச்சியையும், மற்றொரு புறம் கோர்ட்
உத்தரவையும் தூக்கி போட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இந்த திரைப்படம் எதிர்பார்த்தை போலவே ரசிகர்களுக்கு பெரும்
விருந்தாக்கியுள்ளது. நல்ல கருத்துக்கள் வந்துள்ள நிலையில், தமிழ்ராக்கர்ஸ்
மற்றொரு புறம் அதிர்ச்சியை படக் குழுவினருக்கு கொடுத்துள்ளது.
2.0 திரைப்படம்:
ரஜினி-எமிஜாக்ஷன், அக்ஷய்குமார் ஆகியோர் நடிப்பில் நாளை (29ம் தேதி) 2.0
படம் வெளிவர இருக்கின்றது. இந்த திரைப்படம் சுமார் 450 கோடியில்
எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட
இருப்பதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவித்தாக தெரிகின்றது.
இந்நிலையில், இதுகுறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்ராக்கர்ஸ் உட்பட 3 ஆயிரம் இணையதளங்கள்
வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏற்கனவே
தமிழ்ராக்கர்ஸ் கூறியபடி சர்க்கார் படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
திரையரங்குகளில் வெளியானது:
2.0 திரைப்படம் ரஜினி-எமிஜாக்ஷன், அக்ஷய்குமார் ஆகியோர் நடிப்பில் கடந்த 3
ஆண்டாக திரைப்படம் தயாரிக்கப்பட்டது. தற்போது கிராப்பிக்ஸ் பணிகள்
உள்ளிட்டவை முடிந்து இன்று உலகம் முழுக்க சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில்
வெளியானது. இந்த திரைப்படம் சுமார் 450 கோடி செலவில் உருவாக்கப்பட்டதாக
கூறப்படுகின்றது. படத்திற்கு ஏர்ஆர் ரகுமான் இசைஅமைத்துள்ளார். ஹாலிவுட்
கலைஞர்களும், தொழில் நுட்ப வல்லுனர்களுர்களும், ஆடைவமைப்பாளர் உட்பட
ஏராளமானோர் இசை அமைத்துள்ளனர்.
தமிழ்ராக்கர்ஸ் 2.0 வெளியிட்டது:
தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட அனைத்து
மொழிப்படங்களையும் வெளியாகும் தேதியிலோ அல்லது அதற்கு மறுநாளோ ஹெச்டி
தரத்தில் திரைப்படங்களை வெளியிட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி
ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில், தமிழ்ராக்கரஸ் இன்று வெளியான 2.0
படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு தொடர்ந்த லைக்கா:
லைக்கா நிறுவனம்: 2 பாய்ண்ட் ஓ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் வியாழக்கிழமை திரைக்கு வர இருப்பதையொட்டி இணையதளங்களில்
படம் வெளியிடப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில்
லைக்கா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
தமிழ்ராக்கர்சை குறிப்பிட்ட லைக்கா:
450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 2 பாய்ண்ட் ஓ திரைப்படம்
இணையதளத்தில் வெளியானால், தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் எனக்
கூறியுள்ள லைக்கா நிறுவனம், இந்த படத்தை இணையதளத்தில் வெளியிடப்போவதாக
தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளது.
உயர்நீதிமன்றம் தடை:
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தொலைபேசி சேவை நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய
திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை
விதித்திருப்பதாக கூறினார்.
3 ஆயிரம் இணைதளங்களுக்கு தடை:
இதனையடுத்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை தாக்கல் செய்ய
ஆணையிட்ட நீதிபதி சுந்தர், சுமார் 3 ஆயிரம் இணையதளங்களில், டூ பாய்ண்ட் ஓ
படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி வெயிட்டது:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழ்ராக்கர்ஸ் தற்போது, டொமைனை
மாற்றி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சவால்களையும்
தாண்டி கார் கையியிலும் சிக்காமல் தனி ஒருவனாக கலக்கி வருகின்றது இந்த
தமிழ்ராக்கர்ஸ், சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காதலே என்று டயலாக்தான்
நமக்கும் ஞாபகம் வருகின்றது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
மனைவி வாடைகைக்கு கிடக்கும்..மக்களை அதிர்சியில் ஆழ்த்திய விளம்பரம்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும் [Cli...
-
மனைவி வாடகைக்கு கிடக்கும்; டெலிவரி சார்ஜ் எதுவும் கிடையாது என சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்...! திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்&qu...
-
இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்த...
-
Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
-
தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாத...
-
30 வயசு பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஏட்டையாவை போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். என்எஸ்கே நகரிலிருந்த...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
No comments:
Post a Comment