அடுத்தாண்டு, ஜன., 1 முதல், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
நாட்டில், சமீப காலமாக, 'டெபிட், கிரெடிட்'கார்டுகள் மூலம், ஏராள மான மோசடிகள்நடக்கின்றன.இதை தடுக்கும் நோக்கில், அனைத்துவங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, புதிய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை வழங்கும்படி, 2015 ஆகஸ்டில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. (தொடர்ச்சி கீழே...)
இதற்கான பணிகளை மேற்கொள்ள, மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, தங்கள் பழைய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளுக்கு பதில், புதிய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை, டிச., 31க்குள் பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, ஆகஸ்ட் மாதத்தில் அறிவுறுத்தியது.
இதன்படி, இந்த வங்கி யின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை பெற்று வருகின்றனர். பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும், புதிய கார்டுக்கு மாறிவருகின்றனர்.
'சிப்' இல்லாத, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள், 2019 ஜன., 1 முதல் செயல்படாது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் கோரி விண்ணப்பிக்கலாம்; அல்லது சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று, புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட கார்டு, இ.எம்.வி.,எனப்படும், 'யூரோபே, மாஸ்டர் கார்டு, விசா கார்டு' என, அழைக்கப்படுகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யு...
-
5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது! ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ர...
-
[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளி...
-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்...
-
பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப்...
-
தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாத...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
-
காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். புதுச்சேரிக்கு இன்று பள்ளி ...
-
நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி ...
-
கள்ளக்காதலியை கொலையும் செய்துவிட்டு, சடலத்துக்கு பக்கத்திலேயே விடிய விடிய விழித்து கொண்டு உட்கார்ந்திருந்திருக்கிறார் ஒருவர்!! தி..
No comments:
Post a Comment