கோவிலுக்கோ ஏதேனும் பூஜையிலோ அல்லது வீட்டிலோ சாமி கும்பிட்டு முடித்ததும் திருநீறை நெற்றியில் பூசுகின்ற பழக்கம் இருக்கிறது. அப்படி நெற்றியில் திருநீறு கையில் எடுக்கின்ற பொழுதும் அதை
நெற்றியில் வைக்கின்ற பொழுதும் சில வழிமுறைகளையும் சம்பிரதாயங்களையும்
கடைபிடிக்க வேண்டும். அவற்றைப் பற்றி இங்கே விளக்கமாகக் காண்போம்.
வலது கை
ஒருவரிடம் இருந்து திருநீறை வாங்குகின்ற பொழுது, உங்களுடைய இடது கையினை கீழே வைத்துக் கொண்டு, வயது கையால் வாங்குதல் வேண்டும்.
(தொடர்ச்சி கீழே...)
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
இடது கை
வலது கையால் திருநீறை வாங்குகின்ற பொழுது, உடனே நாம் என்ன செய்வோம்.
பொதுவாக, அந்த திருநீறை வலது கையில் இருந்து இடது கைக்கு மாற்றிக் கொண்டு,
பின் வலது கையால் எடுத்து நெற்றியில் பூசுவோம். ஆனால் அப்படி
செய்யக்கூடாது. அப்படி ஒருபோதும் வலது கையிலிருந்து இடது கைக்கு
மாற்றக்கூடாது.
தூய தாள்
வலது கையில் உள்ள திருநீறை இடது கைக்கு மாற்றக் கூடாது. அப்படியெனில் வலது
கையில் உள்ள திருநீறை ஒரு தூய்மையான பேப்பரில் அல்லது பூஜைக்கு எடுத்துச்
சென்ற தேங்காய் ஆகியவற்றில் வைத்துக் கொள்ளலாம்.
கீழே சிந்துதல்
திருநீறை சிலர் வைத்துக் கொண்டபின், அதை கோவிலாக இருந்தால் ஏதேனும்
தூண்களில் கொட்டி விடுவார்கள். அல்லது கீழே கொட்டி விடுவார்கள். அப்படி
செய்வது மிகமிகத் தவறு. திருநீறை ஒருபோதும் கீழே சிந்தவே கூடாது. ஒருவேளை
அப்படி சிந்திவிட்டால், அந்த இடத்தை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
கோவில் தூண்
கோவில்களில் வாங்குகின்ற திருநீறை மீண்டும் கோவிலில் ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது தரையிலோ அல்லது தூண்களிலோ கொட்டிவிடக் கூடாது.
நெற்றியில் பூசும்போது,
திருநீறை நெற்றியில் வைக்கின்ற பொழுது, கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் திரும்பி நின்றவாறு தான் நெற்றியில் இட வேண்டும்.
மந்திரம்
திருநீறு நெற்றியில் பூசுகின்ற பொழுது, சிவனுடைய நாமங்களான சிவ சிவ, ஓம்
நமச்சிவாய, ஓம் சிவாய நமஹ ஆகிய மந்திரங்களை உச்சரித்தல் நலம்.
இஷ்ட தெய்வம்
திருநீறை நெற்றியில் அணியும் போது, சிவனைப் போலவே அவரவர் இஷ்ட
தெய்வங்களையும் மனதில் நிறைத்து வழிபட்டுக் கொண்டே வைக்க வேண்டும்.
திருநீறு என்றால், ஐஸ்வர்யம் என்று பொருள். அப்படியென்றால், ஐஸ்வர்யம்
முழுமையாக நம்மிடம் வர வேண்டும் என்று நினைத்து திருநீறு வைக்க வேண்டும்.
பட்டை போடுதல்
ஆண்களில் சிலர் திருநீறை நெற்றியில் பட்டையாக அணிவதுண்டு. அப்படி
பட்டைஇடுவதற்கும் சில முறைகள் உண்டு. ஆம். நெற்றியில் திருநீறை பட்டையாக
அணிகின்ற பொழுது, இடது கண்ணினுடைய புருதவத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்து
வலது கண் புருவத்தின் இறுதி வரையிலும் அணிய வேண்டும்.
குங்குமம்
முழு நெற்றியிலும் திருநீறை அணிந்து கொள்ளலாம். அவ்வாறு அணிந்து கொண்டு,
இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளுக்குரிய குங்குமத்தை இட்டுக்
கொள்ளலாம்.
நன்மைகள்
ஆன்மீகத்தில் திறுநீறு அணிவதால் நிறைய நன்மைகள் இருப்பதாகக்
குறிப்பிடப்படுகின்றன. அவை,
சிவனருள் கிடைக்கும்
மன அமைதி உண்டாகும்
ஹிப்னாடிசம் செய்ய நடுநெற்றியை தான் பயன்படுத்துவார்கள். அதே திருநீறு,
குங்குமம் வைத்த இடத்தில் ஹிப்னாடிசம், செய்வினைகள் தவிர்க்கப்படுவதாக
கூறப்படுகிறது. திருநீறு நம் நெற்றி மற்றும் தலையில் தேங்கும் தேவையற்ற நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.
திருநீறு இட்டுக் கொண்டு வெளியே சென்றால், கண் திருஷ்டி உண்டாகாமல் தவிர்க்கலாம்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
No comments:
Post a Comment