கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும்
அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம்
தீவிரமடைந்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய் காலத் தில் அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என்றும் காரணம் தெரிவித்து கோயில் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்த நடை முறையை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது’’என தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து வரும் ஏராளமான ‘‘பெண்கள் 50 வயது வரை காத்திருக்க தயார்’’ எனக் கூறி தங்கள் எதிர்ப்பை பதி்வு செய்து வருகின்றனர். கேரளாவில் பல்வேறு இடங்களில் பெண்கள் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனிகிழமையன்று கோட்டயம் மற்றும் சங்கனாச்சேரியில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும், அதனை சீராய்வு செய்து மனு அளிக்கபோவதில்லை என கேரளா அரசு கூறியதை கண்டித்தும் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆரண்மூலாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் வீட்டை முற்றுகையிட்டு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. சபரிமலை அய்யப்பன் கோயில் ஐதீகத்தையும், சம்பிரதாயத்தையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முறையாக எடுத்துரைக்கவில்லை என குற்றம் சாட்டினர். முற்றுகையில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லேசான தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். fff

Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு...
-
ஒருவர் 20 முதல் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால் அவருக்கு பத்தாண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட்டாக இளைஞரை கிணற்றில் தள்ள, நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். மறுநாள் அவரது செ...
-
வரும் 8 ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரி , கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
வானத்திலிருந்து திடீரென வீதிக்கு இறங்கிய பயங்கரத் தீப்பிழம்பு; இலங்கையில் நேற்று நடந்த பேரதிர்ச்சி!!வீதியால் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த நபர் பயங்கர மின்னல் தாகத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக பொலநறுவைப் பொலிஸார் தெரி...
-
ஒரு காலத்தில் ... ரொம்ப பின்னாடி போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு கேக்கமாட்டாங்க . உங்க ...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்..
No comments:
Post a Comment