வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்....!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்....!



தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்:
 கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
(தொடர்ச்சிகீழே...)

இதையும் படிக்கலாமே !!!
ஆமணக்கு எண்ணெய்: 
முழங்கால் வலி உள்ளவர்கள் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
கடுகு எண்ணெய்:
 மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும். மேலும் உலர்ந்த சருமத்திற்கு, தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெய் அந்த நரம்புகள் வழியாக சென்று அவற்றை திறக்கும்.ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த செயலால் உள்ளுறுப்புக்களின் அபாயம் தடுக்கப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும். சளி பிடித்தவர்கள், தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்தால் விரைவில் சரியாகும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment