வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஏன் என்னுடன் பேச மாட்டேங்குறே.. அடுத்தவர் மனைவி மீது ஆசிட் ஊற்றிய நபர்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

ஏன் என்னுடன் பேச மாட்டேங்குறே.. அடுத்தவர் மனைவி மீது ஆசிட் ஊற்றிய நபர்



"ஏன் என்னுடன் பேச மாட்டேங்குறே...?"  என்று கேட்டவாறே காயத்ரி மீது ஆசிட்டை வீசி தப்பிவிட்டார் சீனிவாசன் என்பவர். சேலம், குகை பகுதியைச் சேர்ந்த தம்பதி பாலமுருகன் - காயத்ரி. 16 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் ஆகி ஆண் 2 குழந்தைகளும் உள்ளனர். இரண்டு பேருமே கூலி வேலை பார்ப்பவர்கள். ஆனால் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளனர்.

பிரிந்து வாழ்கின்றனர்
 இந்நிலையில் சீனிவாசன் என்பவருடன் காயத்திரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பை கைவிடுமாறு பாலமுருகன் மனைவியிடம் பலமுறை கேட்டுக் கொண்டார். ஆனால் காயத்ரி அதனை கேட்கவே இல்லை. எனவே மோதல் முற்றி, கடைசியில் தம்பதி இருவருமே பிரிந்து வாழ ஆரம்பித்தனர். தற்போது காயத்ரிக்கு 31 வயதாகிறது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

பைக் வெளியே எடுத்தார்
 ஆனால் நாளடைவில் சீனிவாசனுடனான தொடர்பை காயத்ரி நிறுத்தி கொண்டார். ஆனால் சீனிவாசன் காயத்ரியை விடவில்லை. தன்னிடம் பேசுமாறு கட்டாயப்படுத்திக் கொண்டே வந்தார். இதற்கு காயத்ரியும் மறுப்பு கூறிக் கொண்டே வந்தார். நேற்று காலையும் காயத்ரி தன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக வீட்டிலிருந்த பைக்கை வெளியே எடுத்தார்.



ஆசிட் பாட்டில்
 அப்போது அங்கு வந்த சீனிவாசன், காயத்ரியிடம், "எத்தனை முறை கேட்பது? ஏன் என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? இன்னைக்குகூட என்கூட பேச மாட்டியா?" என்று கேட்டு தகராறு செய்தார். ஆனால் காயத்ரி சீனிவாசனின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் வண்டியை வெளியே தள்ள முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை காயத்ரி மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பினார்.


தீவிர சிகிச்சை
 வலியால் அலறித் துடித்தார் காயத்ரி. அந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, காயத்ரியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் அதற்குள் காயத்ரிக்கு 40 சதவீதம் காயங்கள் ஏற்பட்டுவிட்டது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி சீனிவாசனையும் தேடி வருகிறார்கள்.



வாக்குமூலம்
 மாயமான சீனிவாசன் மர அறுவை மில் ஒன்றில் கூலி வேலை செய்பவராம். இவருக்கு எப்படி ஆசிட் கிடைத்திருக்கும்? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் சேலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காயத்ரியிடம் நேரில் விசாரணை நடத்தி, சம்பவம் குறித்த வாக்குமூலத்தையும் பெற்றுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment